பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், உலகின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவருமான ஷாகித் அப்ரிடி, கிரிக்கெட் களத்துக்கு வெளியே அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அவர் ஓய்வு பெற்றுவிட்டாலும், அவர் மீதான சர்ச்சைகள் குறைந்தபாடில்லை. தற்போது புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியிருக்கிறார் அப்ரிடி.
கனேரியா அடுக்கிய புகார்
ஷாகித் அப்ரிடி மீது பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா குற்றம் சாட்டியுள்ளார். ஒரு இந்து என்பதால், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் அப்ரிடி எப்போதும் தன்னை மோசமாக நடத்தியதாக தெரிவித்துள்ள அவர், மதம் மாறுமாறு பலமுறை அப்ரிடி கேட்டுக் கொண்டதாக தெரிவித்துள்ளார். ஜீ நியூஸ்க்கு அளித்த பிரத்யேக பேட்டியில் 'நான் எப்போதும் அப்ரிடியிடம் இருந்து விலகி இருக்க முயற்சி செய்தேன். அவர் அடிக்கடி என்னை மதம் மாறச் சொன்னார், ஆனால் நான் அவருடைய வார்த்தைகளைப் புறக்கணித்தேன். நான் எல்லா மதத்தையும் மதிக்கிறேன்.
மேலும் படிக்க | ஐசிசி தரவரிசை: டி20ல் இந்தியா முதலிடம்
அப்ரிடி தொந்தரவு செய்தார்
அப்ரிடியைத் தவிர, அணியின் எந்த வீரரும் அவரை மோசமாக நடத்தியதில்லை. கேப்டனாக இருந்தபோது அணியின் முழு கட்டுப்பாட்டையும் வைத்திருந்தார். அப்போது என்னை அடிக்கடி பெஞ்சில் உட்கார வைத்தார். என்னை அணியில் இருந்து நீக்குவது அவருடைய வழக்கம். நான் நன்றாக இருந்தபோதும் எனக்கு ஏன் இப்படி நடக்கிறது? என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. எனக்கு ஏ பிரிவில் ஒப்பந்தம் கிடைத்ததும், அப்ரிடி என்னிடம் பல தவறான வார்த்தைகளை கூறினார். இவை அனைத்தும் என் மனநிலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது" என குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார் கனேரியா.
கனேரியா பிக்ஸிங்கில் சிக்கினார்
ஸ்பாட் பிக்சிங் தடை காரணமாக டேனிஷ் கனேரியா 2013 ஆம் ஆண்டில் கிரிக்கெட்டில் இருந்து தடை செய்யப்பட்டார். மீண்டும் அவர் கிரிக்கெட் விளையாட முயற்சி செய்தபோதும், அந்த முயற்சிகள் கனேரியாவுக்கு பலனளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து பல வீரர்கள் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அவர்களில் பலருக்கு விளையாட மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டது. உதாரணமாக முகமது அமீர் ஸ்பாட் பிக்சிங்கில் சிக்கியபோதும், அவருக்கு பாகிஸ்தான் அணியில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
கிரிக்கெட் விளையாட ஆர்வமாக இருப்பதாகவும், தன் மீது விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் ரமீஸ் ராஜா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR