தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சென்று சந்தித்தார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்!
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நேற்று 100_வது நாளாக போரட்டம் நடைபெற்றது. இதனால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தங்கள் உரிமைக்காகவும், தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனக்கூறி அமைதி பேரணியாக பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி சென்றனர்.
அப்பொழுது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியாதால், போலீஸ் மற்றும் பொது மக்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் மோதலாக மாறியது. இந்த மோதலில் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இந்தக் கலவரத்தில் போராட்டக்காரர்கள் 10 உயிரிழந்துள்ளனர்.
இதை தொடர்ந்து, நேற்று துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவரின் குடும்பத்தினரை நேரில் சென்று ஆறுதல் கூறியதையடுத்து, இன்று காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அவரிடம் நேற்று கதறி அழுத சம்பவங்களை பற்றி விளக்கினர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர்...!
தூத்துக்குடியில் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சந்தித்து கொண்டிருக்கும் போதே இன்று மீண்டும் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது மக்களை தாக்கும் காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறேன்.
மீண்டும் மனித உரிமை மீறல் நடந்திருக்கிறது. துப்பாக்கிச்சூட்டிற்கு முதல்வர் பொறுப்பு ஏற்க்க வேண்டும். முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தூத்துக்குடி வந்து மக்களை சந்திக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என்ற உறுதியை முதல்வர் அளிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
#TamilNadu: DMK Working President MK Stalin meets people who were injured in #SterliteProtest yesterday, at General Hospital in #Thoothukudi. pic.twitter.com/P7Lg3KiSC0
— ANI (@ANI) May 23, 2018