தமிழகத்தில் மேலும் மூன்று கொரோனா வழக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.
தமிழகத்தில் ஏற்கனவே 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38-ஆக அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடுகையில்., மூன்றில் ஒரு வழக்கு சேலத்தில் பதிவாகியுள்ளது. 61 வயது மதிக்கத்தக்க இவர் சமீபத்தில் இந்தோனேசிய நாட்டினருடன் தொடர்பு வைத்திருந்ததாக தெரிகிறது. இவர் தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
#coronaupdate: #TN has 3 new +ve cases.73 Y F from Chennai at #RGGH.61 Y M contact of Indonesian Nationals, at #Salem Med Colg,39 Y M from Anna Nagar,Chennai at #KMCH. Patients in isolation & are stable. #TN_Together_AgainstCorona@MoHFW_INDIA @CMOTamilNadu @Vijayabaskarofl
— National Health Mission - Tamil Nadu (@NHM_TN) March 27, 2020
மற்ற இரண்டு வழக்குகள்... 73 வயது பெண் மற்றும் 39 வயது ஆண் (இருவரும் சென்னையைச் சேர்ந்தவர்கள்). இவர்களது பயண வரலாறு அல்லது தொடர்பு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனினும் விரைவில் அவர்களது பயணத்தொடர்பு குறித்த தகவல்கள் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவை பொறுத்தவரையில் தற்போது கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 700 நோக்கி சென்றுகொண்டு இருக்கிறது. உயிர் பலி எண்ணிக்கையானது 18-னை எட்டியுள்ளது. தமிழகத்தில் தற்போது வரையில் 38 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், ஒருவர் மறணித்து இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.