பசுமாடு ஒன்று சேற்றில் சிக்கியிருக்கிறது ; உரிமையாளரான விவசாயி போராடி அதை மீட்டுள்ளார். இத்தோடு இந்தச் சம்பவம் முடியவில்லை. அதன்பிறகு நடந்தவை என்ன ?!
தமிழ்நாட்டில் பசுமாட்டிற்கும், அதை வளர்ப்போருக்குமான உறவு எப்போதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடியவை. பசுமாடு மட்டுமல்ல ; எந்த கால்நடையாக இருந்தாலும் சரி. பெரம்பலூர் அருகே பசு மாடு ஒன்று சேற்றில் சிக்கியதால் செய்வதறியாது தவித்த அதன் உரிமையாளர், கிராம நிர்வாக அலுவலர் வரை பிரச்சனையைக் கொண்டுபோய், பாசப்போராட்டம் நடத்தி மீட்ட கதை அனைவரையும் உருக வைத்துள்ளது.
மேலும் படிக்க | கன்றுக்குட்டியுடன் நாய்க்கும் பாலூட்டும் தாய்ப்பசு - வைரல் வீடியோ
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், சங்கராய நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பேரையூர் கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜ் என்பவர் விவசாயி. சொந்தமாக ஆடு, மாடுகளையும் தர்மராஜ் வளர்த்து வருகிறார். இந்நிலையில் ஊருக்கு மேற்கு பகுதியில் உள்ள மருதையாற்றில் மேய்ச்சலுக்கு சென்ற தர்மராஜின் பசுமாடு ஒன்று திடீரென சேற்றுக்குழியில் சிக்கி உயிருக்கு போராடியுள்ளது. மாட்டை கயிற்றைக் கட்டி மீட்க எவ்வளவோ முயன்றும் தர்மராஜால் முடியவில்லை. நேராக, கிராம நிர்வாக அலுவலரிடம் சென்ற தர்மராஜ், பசுமாட்டை உடனடியாக மீட்டுத்தருமாறு கேட்டுள்ளார். எந்தவித நடவடிக்கையும் எடுத்தபாடில்லை. சுயமாக களத்தில் இறங்கினார் தர்மராஜ். தனது ஊரைச் சேர்ந்த இளைஞர்களை அழைத்தார். ஜே.சி.பி இயந்திரத்தின் உதவியுடன் பசு மாட்டைக் கயிற்றால் கட்டி இரண்டு மணி நேரம் போராடி உயிருடன் பத்திரமாக மீட்டார். உடல் முழுவதும் சேற்றால் அப்பியிருந்த பசு மாட்டை அருகில் இருந்த நீர்நிலைக்கு கொண்டு சென்று கழுவி சுத்தப்படுத்தினார். இதோடு, தர்மராஜ் மாட்டை அழைத்துக்கொண்டு வீட்டுக்குச் செல்லவில்லை. நேராக, கிராம நிர்வாக அலுவலகத்திற்கு ஓட்டிச்சென்றார். அங்கு, ‘சேற்றில் சிக்கிய பசுமாட்டை ஏன் மீட்பதற்கு உதவி செய்யவில்லை?’ என்று கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணசாமியிடன் கேட்டுள்ளார். அதற்கு அவர் அளித்த பதில் இது, ‘பசுமாட்டை மீட்பது எனது வேலை அல்ல!. எனக்கு நிறைய வேலை இருக்கிறது. அந்த வேலைதான் எனக்கு முக்கியம்’.
மேலும் படிக்க | மின் அழுத்த கம்பியில் சிக்கி 8 கறவை மாடுகள் உயிரிழப்பு: புதுச்சேரியில் பரிதாபம்
இதனால் மனவேதனை அடைந்த தர்மராஜ், பல கேள்விகளை மக்கள் முன்வைத்துள்ளார்.
1. புஜங்க ராயநல்லூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் அடிக்கடி மணல் திருட்டு நடைபெற்று வருகிறது. இது கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணசாமியின் வேலைதானே. இதனை ஏன் தடுக்கவில்லை ?
2. இது குறித்து புகார் தெரிவித்தால் வருவாய்த்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. அதுகுறித்த வி.ஏ.ஓவின் பதில் என்ன ?
3. இந்த மணல் திருட்டால்தான் எனது பசுமாடு சேற்றில் சிக்கி உயிருக்கு போராடியுள்ளது. இதற்கு வி.ஏ.ஓ. நடவடிக்கை எடுப்பாரா ?
4. இந்தச் சேற்றில் இன்று எனது பசுமாடு ; நாளை மனிதர்களுக்கும் இதே நிலைதான் !
தர்மராஜின் கேள்விகளோடு, அப்பகுதியில் வசிக்கும் சமூக ஆர்வலர்களும் கைக்கோர்த்து நிற்கின்றனர்.!
மேலும் படிக்க | பசுவின் வயிற்றிலிருந்து 77 கிலோ பிளாஸ்டிக்கை நீக்கிய மருத்துவர்கள்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR