சென்னை கானத்தூர் காவல் நிலையத்தில் இரண்டு தொழிலதிபர்கள் மீது சினேகா மற்றும் அவரது கணவர் பிரசன்னா ஆகியோர் புகார் அளித்துள்ளார்கள். இருவரும் ஒரு ஏற்றுமதி நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், உரிய வருமானம் தருவதாக உறுதியளித்து பணத்தை முதலீடு செய்யும்படி கூறியதாகவும், ஆனால் தனக்கு பணம் தரவில்லை என்றும் அவர் தனது புகாரில் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பனையூரில் குடும்பத்தோடு வசித்து வருபவர் நடிகை சிகேனா,. இவரது கணவர் நடிகர் பிரசன்னா, சமீபத்தில் சந்தியா மற்றும் சிவராஜ் கெளரி என்பவர் மூலம் எம்.எஸ். கெளரி சிமெண்ட் அண்ட் மினரல் சிமெண்ட் கம்பெனியில் 26 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், மாதாமாதம் 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணம் கிடைக்கும் என தெரிவித்ததின் காரணத்தால், நடிகர் பிரசன்னா ஆன்லைன் மூலமாக 25 லட்சம் ரூபாயும் ரொக்கமாக 1 லட்சம் ரூபாயும் கொடுத்துள்ளார்.
முதலீடு செய்தது முதல் மே மாதத்திலிருந்து தற்போது வரை மாதாமாதம் வழங்கும் தொகையை தராமல் வந்ததால், பணத்தையோ அல்லது அதற்கு வட்டியையோ திருப்பிக் கேட்டதற்கு மிரட்டல் விடுப்பதாகவும் கூறி பிரசன்னா தம்பதியினர் கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்தவர் பிரபல நடிகை சினேகா. நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக இருக்கும் இவர் தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
நடிகை சினேகா கடைசியாக தனுஷின் பட்டாஸ் (Pattas) படத்தில் நடித்திருந்தார். மேலும் தற்போது வெங்கட் பிரபுவின் ஜோடியாக 'ஷாட் பூட் 3' (Shot Boot 3) குழந்தைகளை மையமாகக் கொண்ட பொழுதுபோக்கு படத்தில் நடித்து வருகிறார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR