சட்டமன்ற தேர்தல் புதுச்சேரி உட்பட அசாம், கேரளா, தமிழகம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கு நடந்து முடிந்தது.
தமிழகம் புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாகவும்..
மேற்கு வங்காளத்தில் 6 கட்டமாகவும், அசாமில் 2 கட்டமாகவும் தேர்தல் நடந்தது.
புதுச்சேரியில் மொத்தம் 30 தொகுதிகள் உள்ளது. வாக்கு எண்ணிக்கை காலையில் தொடங்கியது.
காங்கிரஸ் திமுக கூட்டணி மொத்தம் 17 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதாவது காங்கிரஸ் 15 இடங்களையும் திமுக 2 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.
ஆளுங்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் வெறும் 8 இடங்களை மட்டும் கைப்பற்றியுள்ளது. இக்கட்சியின் முக்கிய அமைச்சர்களும் தோல்வியடைந்தனர்.
புதுச்சேரியில் ஆட்சி அமைக்க குறைந்தது 16 தொகுதிகள் வேண்டும். எனவே காங்கிரஸ் திமுக கூட்டணி மொத்தம் 17 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாள்.
புதுச்சேரியில் காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது.