Tips For Students During Exam Period: எல்லா சூழ்நிலைகளையும் கையாள்வதில் தகவல் தொடர்பு ஒரு மிக முக்கியமான பகுதி ஆகும். மேலும் குழந்தைகள் அணுகக்கூடிய வகையில் நெகிழ்வுத் தன்மையுடன் இருப்பது சவாலான சமயங்களில் பெற்றோரைப் பிள்ளைகள் ஏற்றுக் கொள்வதற்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக இருக்கும்.
சவாலான நேரங்களில் குழந்தைகளுக்கான சில சமாளிக்கும் உத்திகள் குறித்து ஆர்க்கிட்ஸ் தி இண்டர்நேஷனல் பள்ளியின் SEN & கவுன்சிலிங் துறைத் தலைவரான, அர்ச்சனா பாத்யே நம்மிடம் பகிர்ந்துகொண்டார். அந்த உத்திகளை ஒவ்வொன்றாக இதில் காணலாம்.
தொடர்ந்து படித்தல் மற்றும் நினைவு கூர்தல்
ஒவ்வொரு நாளும் பாட உள்ளடக்கத்தைப் படிப்பது அல்லது மன வரைபடங்கள் மற்றும் ஃப்ளோ சார்ட் என்னும் பாய்வு விளக்கப்படங்களை உருவாக்குவது போன்ற நிலையான மதிப்பாய்வு கற்றல் நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் படிப்பதை மனதில் தக்க வைத்தல் மற்றும் பாடம் சார்ந்த புரிதலை மேம்படுத்திக் கொள்ளலாம்.
சுருக்கக் குறிப்புகளை உருவாக்குதல்
திறமையான கற்றல் அமர்வுகளுக்கு சிக்கலான தகவலை சுருக்கிப் படிக்கலாம், மேலும் சிறந்த புரிதலை வளர்த்து மற்றும் முக்கியக் கருத்துகளை விரைவாக நினைவு கூர்ந்து கற்கலாம்.
சிறிய இடைவெளிகளுடன் சரியான நேரத்தில் கற்றல்
கற்றல் அமர்வுகளுக்கு இடையே குறுகிய ஓய்வு இடைவெளிகளை இணைத்து, கவனத்தை மேம்படுத்துதல் மற்றும் எரிச்சல் ஏற்படுவதைத் தடுப்பதன் மூலம் கற்றலுக்கான உற்பத்தித் திறனை அதிகரிக்கலாம்.
மேலும் படிக்க | பள்ளியில் அடிப்படை வசதியில்லை...! கொதித்தெழுந்த மாணவர்கள்!
Pomodoro நுட்பம் போன்ற படிப்புத் திறன்கள்
Pomodoro நுட்பம் போன்ற திறமைகளைப் பயன்படுத்துவதன் மூலம் ஒருமுகப்படுத்தும் திறன் மற்றும் நேர நிர்வாகத்தை மேம்படுத்தலாம், இது குறுகிய இடைவெளிகளைத் தொடர்ந்து கவனம் செலுத்தும் கற்றலுக்கான நேர இடைவெளிகளை உள்ளடக்கியது.
நாள் மற்றும் படிப்பைத் திட்டமிடுதல் மற்றும் ஒழுங்கமைத்தல்
உங்களது நாளை நன்கு திட்டமிட்டு கட்டமைப்பதன் மூலம் செயல்திறனை அதிகரிக்கலாம், நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் இலக்கு சார்ந்த அணுகுமுறையை பராமரிக்க படிப்பதற்கென குறிப்பிட்ட நேர இடைவெளிகளை ஒதுக்க வேண்டும்.
நன்கு உண்ணுதல் மற்றும் உறங்குதல்
சமச்சீரான உணவைப் பேணுதல் மற்றும் போதுமான தூக்கத்தை உறுதி செய்து, ஒட்டுமொத்த நல்வாழ்வு மற்றும் கல்விச் செயல் திறனுக்கு பங்களிப்பதன் மூலம் அறிவாற்றல் செயல்பாட்டை ஆதரிக்க உடல் நலனிற்கு முன்னுரிமை அளியுங்கள்.
வேலையைத் தள்ளிப் போடாமல் இருத்தல்
வேலைகளைத் தாமதப்படுத்துவதைத் தவிர்ப்பதன் மூலம் படிப்பதற்கான உற்பத்தித்திறனை அதிகரிக்கலாம் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கலாம், மேலும் படிப்பதில் ஒரு நல்ல செயல்திறன் மற்றும் ஒழுக்கமான அணுகுமுறையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
பெற்றோருக்கும் சின்ன டிப்ஸ்...
தேர்வுக் காலங்களில் உங்களது பிள்ளையின் உணர்ச்சி நல்வாழ்வை ஆதரிப்பது என்பது, மனம் திறந்த தொடர்பு, யதார்த்தமான திட்டமிடல் மற்றும் நேர்மறையான சூழ்நிலையை உள்ளடக்கிய ஒரு முழுமையான அணுகுமுறையாகும்.
பிள்ளைகளுக்கு ஆதரவாக இருப்பதன் மூலமும், அவர்தம் உணர்ச்சி ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதன் மூலமும், பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை நம்பிக்கையுடனும், நெகிழ்வுத் தன்மையுடனும் தேர்வுகளை எதிர்கொள்ள மற்றும் நீண்ட கால வெற்றிக்கான களத்தை அமைக்க அவர்களுக்கு அதிகாரமளிக்க முடியும்.
மேலும் படிக்க | குடிநீரை வீணாக்காதீங்க... காஞ்சீபுரம் MLA, மேயர் மக்களிடம் வேண்டுகோள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ