கலைஞர் கருணாநிதி மறைவு: சர்கார் படப்பிடிப்பு ஒத்திவைப்பு!

தி.மு.க தலைவர் மறைவின் காரணமாக லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்று வந்த சர்கார் படத்தின் படப்பிடிப்பு இன்று தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 8, 2018, 12:43 PM IST
கலைஞர் கருணாநிதி மறைவு: சர்கார் படப்பிடிப்பு ஒத்திவைப்பு!  title=

தி.மு.க தலைவர் மறைவின் காரணமாக லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்று வந்த சர்கார் படத்தின் படப்பிடிப்பு இன்று தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது! 

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் தி.மு.க தலைவர் கருணாநிதி கடந்த ஜூலை 27 ஆம் நள்ளிரவில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். தொடர்ந்து சிகிச்சை ஏற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார்.

திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி இன்று அரசு விடுமுறை என்றும், அடுத்த 7 நாட்களுக்கு அதாவது ஒருவாரம் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் உள்ள அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய இடம் ஒதுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏர்.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் சர்கார். இதில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்து வருகின்றனர். ஏ.ஆர். ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 

தற்போது லாஸ் வேகாஸ் நகரில் நடந்து வரும் சர்கார் படத்தின் படப்பிடிப்பு இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. 

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் சர்கார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது! 

 

Trending News