’ஒரு வேலையும் செய்யல’ ஆளுநர் மற்றும் அண்ணாமலையை கலாய்த்த டி.ஆர்.பி ராஜா

நாங்க கொடுத்த ஒரே ஒரு வேலையையும் ஆளுநர் செய்யவில்லை என மன்னார்குடி எம்.எம்.ஏ டி.ஆர்.பி ராஜா டிவிட்டரில் கலாய்த்துள்ளார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 15, 2022, 01:19 PM IST
  • ஆளுநர் மற்றும் அண்ணாமலையை கலாய்த்த டிஆர்பி ராஜா
  • கொடுத்த ஒரே ஒரு வேலையையும் செய்யவில்லை
  • தமிழக மக்கள் பணத்தில் தான் ஆளுநர் தேநீர் விருந்து கொடுத்துள்ளார்
’ஒரு வேலையும் செய்யல’ ஆளுநர் மற்றும் அண்ணாமலையை கலாய்த்த  டி.ஆர்.பி ராஜா title=

தமிழ் புத்தாண்டையொட்டி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் பங்கேற்குமாறு ஆளுநர் சார்பில் தமிழக முதலமைச்சர் மற்றும் திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், இந்த நிகழ்வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறக்கணித்தார். திமுக கூட்டணிக் கட்சிகளும் ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணித்த நிலையில், அதிமுக, பா.ஜ.க மற்றும் பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் இதில் பங்கேற்றன. 

மேலும் படிக்க | அரசுப் பணி ஊழலுக்கு முற்றுப்புள்ளி எப்போது? கனவாகும் தமிழக மாணவர்களின் அரசுப் பணி

ஆளுநர் தேநீர் விருந்தை முதலமைச்சர் மற்றும் திமுக கூட்டணிக் கட்சியினர் புறக்கணித்தது குறித்து விமர்சனம் செய்த தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ஆளுநருக்கு டீ செலவு மிச்சம் என கிண்டலாக கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ ஆளுநர் ஷாநவாஸ், டீ செலவு மிச்சமா? டீசல் செலவு மிச்சம் என தெரிவித்தார். அவரின் இந்தப் பதிவுக்கு பதில் கொடுத்த தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இந்த  தேநீர் விருந்து யார் தனிப்பட்ட நிதியிலிருந்தும் வழங்கப்படுவதில்லை. தமிழ் மக்களின் பணத்தில் இருந்து செலவிடப்படுகிறது. சொன்னதுபோல் சேமிப்பு இருந்ததா? இல்லையா? என்பதை பில் வரும் வரை காத்திருப்போம் என கூறியுள்ளார்.

இந்தப் பதிவை சுட்டிக்காட்டியுள்ள திமுகவின் மன்னார்குடி எம்.எல்.ஏ டிஆர்பி ராஜா, தன்னுடைய ஒரே பதிவில் ஆளுநர் மற்றும் அண்ணாமலையை கலாய்த்துள்ளார். டீ கூட சொந்தக் காசில் இல்லையா? என வினவியுள்ள அவர், இங்கிருந்து தமிழக மக்களின் பணத்தில் சாப்பிட்டுவிட்டு நாங்கள் கொடுத்த ஒரே ஒரு வேலையான நீட் விலக்கு மசோதாவை டெல்லிக்கு அனுப்புவதைக் கூட செய்யவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

ஆளுநருக்கு செலவு மிச்சம் என அண்ணாமலை கூறியிருந்த நிலையில், அது ஆளுநரின் பணம் இல்லை, தமிழக மக்களின் பணத்தில் தான் தே நீர் விருந்து வைக்கிறார் என திமுகவினர் பதிலடி கொடுத்துள்ளனர். 

மேலும் படிக்க | ஆளுநர் தேநீர் விருந்து... ஆளுங்கட்சி புறக்கணிப்பு - காரணம் என்ன?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News