TN Govt., பேருந்துகளை நவீனமயமாக்க ஜெர்மனி அரசு 580 கோடி ஒதுக்கீடு!

இந்தியாவிற்கு அரசு முறை பயணமாக வருகை தந்துள்ள ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் அவர்களிடம் தமிழகத்தில் முதலீடு செய்ய பிரதமர் மோடி வேண்டுகொள் விடுத்த நிலையில் அந்த வேண்டுகோளை ஏற்று தமிழகத்தில் ரூ.1580 கோடி ஒதுக்க ஒப்புக்கொண்டுள்ளார். தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் இந்த ரூ.1580 கோடி தமிழக அரசு பேருந்து துறையை முதலீடு செய்யப்படும் என்றும் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார். ஜெர்மனி அதிபரின் இந்த அறிவிப்பால் தமிழக அரசு மகிழ்ச்சி அடைந்துள்ளது.

Last Updated : Nov 2, 2019, 12:10 PM IST
TN Govt., பேருந்துகளை நவீனமயமாக்க ஜெர்மனி அரசு 580 கோடி ஒதுக்கீடு! title=

இந்தியாவிற்கு அரசு முறை பயணமாக வருகை தந்துள்ள ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் அவர்களிடம் தமிழகத்தில் முதலீடு செய்ய பிரதமர் மோடி வேண்டுகொள் விடுத்த நிலையில் அந்த வேண்டுகோளை ஏற்று தமிழகத்தில் ரூ.1580 கோடி ஒதுக்க ஒப்புக்கொண்டுள்ளார். தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் இந்த ரூ.1580 கோடி தமிழக அரசு பேருந்து துறையை முதலீடு செய்யப்படும் என்றும் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார். ஜெர்மனி அதிபரின் இந்த அறிவிப்பால் தமிழக அரசு மகிழ்ச்சி அடைந்துள்ளது.

தமிழகத்தில் அரசுப் பேருந்துகளை நவீனமயமாக்க ஆயிரத்து 580 கோடி ரூபாயை ஜெர்மனி ஒதுக்கீடு செய்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார். 3 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், டெல்லியில் வர்த்தக மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார். நகர்ப்புறங்களில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத பசுமைப் போக்குவரத்திற்காக, இந்தியாவும் ஜெர்மனியும் கூட்டாக இணைந்து செயல்படுவதாகக் குறிப்பிட்டார்.

இதற்காக 1 பில்லியன் டாலர்கள் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். தமிழகத்தில் அரசுப் பேருந்துகளை நவீனமயமாக்க 200 மில்லியன் யூரோக்கள் அதாவது ஆயிரத்து 580 கோடி ரூபாயை ஜெர்மனி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்தார். அதேபோல் டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்க டீசல் பேருந்துக்கு பதில் மின்னணு பேருந்துகள் போன்ற நல்ல வழியை காணவேண்டும் என்றும் அதற்கான திட்டம் தயாரானால் அந்த திட்டத்திற்கும் ஜெர்மனி நிதியுதவி செய்யும் என்றும் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார். மேலும் டெல்லியில் காற்று மாசுபாட்டின் ஆபத்தை உணரும் யாரும், டீசல் பேருந்துகளை கழித்துக்கட்டி விட்டு மின்சார பேருந்துகளை பயன்படுத்துவதன் அவசியத்தை புரிந்துகொள்வார்கள் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார். 

Trending News