ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரை விடுவிப்பது குறித்து தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோகித் அவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்!
மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன், நளினி உட்பட 7 பேர் சிறையில் கடந்த 25 ஆண்டுகளாக உள்ளனர். அவர்களை விடுதலை செய்வது தொடர்பான வழக்கில், தமிழக அரசே முடிவு செய்யலாம் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து கடந்த செப்டம்பர் 9-ஆம் நாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறை தன்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுவிக்க தமிழக ஆளுநருக்கு இன்றே பரிந்துரை செய்யப்படும் என முடிவெடுக்கப்பட்டது.
இதனையடத்து ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறை தன்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுவிக்க தமிழக ஆளுநருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் இன்று தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோகித் அவர்கள் பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் அமைச்சரவையின் பரிந்துரை தொடர்பாக சட்ட வல்லுநர்களிடம் ஆளுநர் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது!