சென்னை: தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் பரவலான மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்துவரும் நிலையில், மக்கள் பெரும்பாலான இடங்களில் இதமான வானிலையை அனுபவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், வரும் 11 ஆம் தேதி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திராவில் ஏற்படும் தாழ்வு மண்டலம் காரணமாக தழகத்தில் (Tamil Nadu) அதி கன மழை பெற வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள் தமிழ்நாடு முதல் மன்னார் வளைகுடா வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனத்தின் காரணமாக இன்று நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, கன்னியாகுமரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரியின் சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
Also Read: தமிழ் கற்பிக்காத கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தமிழ்நாட்டில் எதற்கு? வைகோ கேள்வி
மேலும், தமிழகத்தின் மீதமுள்ள மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை (Rain) பெய்யலாம் என்றும் அவர் கூறினார்.
நாளை (ஜூலை 10) முதல் ஜூலை 12 ஆம் தேதி வரை நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். இது மிக அதிகன மழையாகும் வாய்ப்புகளும் உள்ளன.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் ஈரோடு, விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்களின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே இருக்கும்.
சென்னையை பொறுத்தவரை நேற்று பகலில் வெயில் கடுமையாக இருந்தது. எனினும், இரவு முழுவதும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. கிண்டி, கோடம்பாக்கம், கோயம்பேடு, நங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக மழை பெய்தது. தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளிலும் மழை பெய்தது.
சென்னையில் (Chennai), அடுத்த 2 நாட்களுக்கு 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று பரவலான மழை பெய்தது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்க்குறிச்சி கலயநள்லூரில் 14 செமீ மழை பதிவானது. திருவண்ணாமலையின் கலசப்பாக்கத்தில் 13 செமீ, கள்ளக்குறிச்சியின் ரிஷிவந்தியத்தில் 11 செமீ என நேற்று மழை பதிவாகியுள்ளது.
ALSO READ: மத்திய இணை அமைச்சராகிறார் பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன்?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR