பொங்கல் பரிசுத் தொகை எவ்வளவு வழங்கப்படும்? உணவு துறை அமைச்சர் விளக்கம்

பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்படுமா? அந்த தொகை எவ்வளவு? என்பது குறித்து முதலமைச்சர் தான் முடிவு செய்வார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 28, 2021, 06:34 PM IST
பொங்கல் பரிசுத் தொகை எவ்வளவு வழங்கப்படும்? உணவு துறை அமைச்சர் விளக்கம் title=

சென்னை: சென்னை திருவான்மியூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் உணவு துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு மேற்கொண்டார். 

பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் பேட்டி, தமிழகத்தில் உள்ள 2 கோடியே 15 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 வகையான பொங்கல் தொகுப்பு  வழங்கபட உள்ளது.  சுமார் 600 ரூபாய் மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட உள்ளது.

பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்போது சரியான எடை மற்றும் தரத்துடன் வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகளில் வழங்கப்படவுள்ள பொங்கல் தொகுப்பினை கட்டாயம் கைரேகை வைக்க வேண்டிய அவசியம் இல்லை. குடும்ப அட்டைதாரர்கள் யாரேனும் ஒருவர் சென்று பெற்றுக் கொள்ளலாம்.

ஜனவரி 3 அல்லது 4 ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்புகள் வழங்கப்படும்.

ALSO READ | மத்திய அரசின் அரசாணைப்படி ஜல்லிக்கட்டு நடைபெறும் - ஓ.பி.எஸ்

டோக்கன்கள் முன்னதாகவே வினியோகிக்கப்பட்டு வழிமுறைகளை பின்பற்றி பொங்கல் தொகுப்புகள் ரேஷன் கடைகளில் வழங்கப்படும்.

கடந்த அதிமுக ஆட்சியில் 30 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டு அதில் 12 லட்சம் மெட்ரிக் டன் மட்டுமே விநியோகித்து விட்டு மீதம் அப்படியே வைத்துவிட்டு சென்றுவிட்டனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் தேவைக்கு அதிகமாக கூடுதல் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

ALSO READ | அரசு ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி: அகவிலைப்படியை அதிகரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்படுமா? அந்த தொகை எவ்வளவு? என்பது குறித்து முதலமைச்சர் தான் முடிவு செய்வார்.

உணவுப் பொருளான வெல்லத்தில் கலப்படம் நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்க  தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு சோதனை செய்து வருகிறோம். ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ALSO READ | தை முதல் நாளை புத்தாண்டாக அறிவிக்கிறதா அரசு!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News