தர்மபுரி மாவட்டம் பொ. மல்லாபுரம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்று முடிந்தது. திமுகவினர் 10 வேட்பாளர்களும் பாமக 3 வேட்பாளர்களும் விசிக வேட்பாளர்கள் 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர்.
இந்த நிலையில் பொ.மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் பதவியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கு திமுக தலைமை கழகம் ஒதுக்கி அறிவித்து இருந்த நிலையில் 13வது வார்டு பகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சாந்தி புஷ்பராஜ் கடந்த 4 ஆம் தேதி தலைவர் பதவிக்கான ரகசிய வாக்கெடுப்பு மூலம் தன்னுடைய திமுக ஆதரவாளர்களுடன் 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக தேர்தல் அலுவலர் அறிவித்தனர்.
இதைக்கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த 4 வது பொது வார்டு கவுன்சிலர் சின்னவேடி தலைமையில் சாலை மறியல் போராட்டம் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு உள்ளிட்ட போராட்டம் நடைபெற்றது.
மேலும் படிக்க : திருமாவளவனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் திமுக உறுப்பினர்கள்!
இதனைத்தொடர்ந்து தலைமை கழகம் அறிவித்தது போல் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு பேரூராட்சி தலைவர் பதவியை தர வேண்டும் என விசிகவினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதே போல் திமுக தலைவர் கட்டளையை மீறக்கூடாது என திமுக மாவட்ட பொறுப்பாளர் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்கள் சாந்தி புஷ்பராஜியிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் அவர் பதவி விலக மறுத்து வருகிறார். இந்த நிலையில் இன்று திமுகவை சார்பில் போட்டியிட்டு பேரூராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட சாந்தியின் கணவர் புஷ்பராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்பொழுது அவர் கூறும்போது, தான் திமுகவில் 40 ஆண்டுகளாக இருக்கிறேன். நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தனது மனைவி வெற்றிபெற்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். விசிகவினரும் பாமகவும் மறைமுக கூட்டணி வைத்துக்கொண்டதால் தனியாக போட்டியிட்டேன். கூட்டணிக்கட்சியான விசிகவிற்கு ஒதுக்கியதால் என்னை பதவி விலக வேண்டும் என திமுக தலைமை டார்சர் செய்து வருவதால் நான் தற்கொலை செய்துகொள்வேன் என்றார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், என்னை திமுகவை விட்டு நீக்கினாலும் பரவாயில்லை நான் பதவி விலக மாட்டேன் என பேரூராட்சித் தலைவரின் கணவர் புஷ்பராஜ் தெரிவித்தார். இதனால் விசிகவினர் மற்றும் திமுகவினரிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க : தொல்.திருமாவளவனின் கண்டனமும் கோரிக்கையும் - உடனடியாக நடவடிக்கை எடுத்த முதல்வர்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR