சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை நடிகர் கமல்ஹாசன் சந்தித்துப் பேசினார். அரசியல் பயணம் தொடங்குவதை ஒட்டி விஜயகாந்த்தை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
நேற்று திமுக தலைவர் கருணாநிதி, ரஜினிகாந்தை சந்தித்த நிலையில் இன்று விஜயகாந்துடன் கமல் சந்தித்துப் பேசினார்.
தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள நடிகர் கமல் பிப்.21 முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்வதாகவும், அன்றைய தினம் கட்சியின் பெயரை அறிவிக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.
#KamalHaasan met DMDK chief Captain Vijaykanth at his office in Chennai pic.twitter.com/7qwVOMrA5V
— ANI (@ANI) February 19, 2018
இந்த சுற்றுப் பயணத்தை முதல்கட்டமாக ராமேஸ்வரத்தில் ஆரம்பித்து பின் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட மக்களை சந்திக்க உள்ளதாகவும், "மக்களின் ஆதரவோடு இந்த சுற்றுப் பயணம் தொடங்கிகிறேன் கரம் கோர்த்திடுங்கள் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை நடிகர் கமல்ஹாசன் சந்தித்துப் பேசினார்.
விஜயகாந்தை சந்தித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன் பேட்டி:_
சகோதரர் விஜயகாந்தை சந்தித்து நீண்ட நாட்கள் ஆவதால் நேரில் சந்திக்க வந்தேன்எ
னது அரசியல் பயணத்திற்கு அரசியலில் மூத்தவரான விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றேன்.
திராவிட அரசியலை பின்பற்றி வெற்றி பெற்று காட்டுவேன்.
நீங்கள் எல்லாம் அரசியலுக்கு வரவேண்டும் என விஜயகாந்த் என்னை வாழ்த்தினார் என்றார்.