குமரி மாவட்டத்தில் கன மழை பெய்து பல்வேறு இடங்களை நேரில் ஆய்வு செய்து அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடியாக பணிகளை செய்து கொடுக்கும்படியும் உத்தரவிடுகிறார் இதனால் பணிகள் துரிதமாக நடைபெற்றும் வந்தது. இந்நிலையில் வைக்கலூர் பகுதியில் ஆய்வு செய்த அமைச்சர் அங்கு பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைக்கப்பட்டிருந்த நிவாரண முகாமுக்கு சென்றார்.
அங்கு தங்க வைக்கப்பட்திருந்தவர்களுக்கு எந்த ஒரு வசதியும் செய்து கொடுக்கப்படாமல் இருந்ததை கவனித்த அமைச்சர் கோபமடைந்து அதிகாரிகளிடம் தனது கோபத்தை வெளிப்படுத்திய அமைச்சர் அவர்களுக்கு ஏன் இதுவரை எந்த வசதிகளும் செய்யவில்லை என கேள்வியெழுப்பியவர் உடனடியாக ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட்டார். உடனடியாக செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தும் அங்கு இருந்து செல்லாத அமைச்சர் உணவு, பெட்ஷீட், போர்வை, தலையணை, முக்கியமாக மின்சார வசதி என்று அனைத்தும் ஏற்படுத்தப்பட்டதும் பின்னர் அங்கு தங்கவைக்கப்பட்டவர்களிடம் பேசிய அமைச்சர் வரும் காலங்களில் வைக்கலூர் பகுதியில் மழை வெள்ளம் பாதிப்பு ஏற்படாதவாறு நிரந்தர தீர்வு ஏற்படுத்தபடும் என்று உறுதியளித்து அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
பாதிக்கப்பட்ட மக்கள்அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுத்தது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர். அமைச்சரின் காணொளி சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
ALSO READ கட்சிக்காரன்கிட்டயே 15% கமிஷனா? கொந்தளித்த திமுக பிரமுகர்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR