நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி சேர்ந்தவர் ஜெயா. இவர் கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பை முடித்து. மருத்துவர் ஆக வேண்டும் என்ற ஆசையின் காரணமாக படித்து அவர் நீட் தேர்வு எழுதினார். கடந்த மாதம் வெளியாகிய தேர்வு முடிவில் மாணவி ஜெயா 69 மதிப்பெண் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். இதனால் மன வருத்தத்தில் இருந்த அவரை திருப்பூரில் உள்ள அக்கா வீட்டுக்கு பெற்றோர் அனுப்பி வைத்தனர். அங்கு சில வாரங்கள் இருந்த ஜெயா பெற்றோரை பார்க்க வேண்டும் எனக்கூறி கூடலூர் வந்திருக்கிறார்.
ALSO READ | கோவிட்-19 தடுப்பூசி குழந்தைகளுக்கு பாதுகாப்பானதா? நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை!
இந்நிலையில் கடந்த 17ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை மாவட்டம் காரமடையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருந்த போதிலும் அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் அவரின் தற்கொலை குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்த காவல்துறையினர் அவர் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அத்துடன் மாணவி ஜெயா எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று சிக்கியது. அதை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த கடிதத்தில், நீட் தேர்வில் வெற்றி பெற முடியாததால் என்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை. தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என முடிவெடுத்தேன். அம்மா… என்னை மீண்டும் மன்னித்துவிடு என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR