அமைச்சர் ஆனா உடனே உதயநிதிக்கு வந்த முதல் கோரிக்கை!

அமைச்சராய் கிரீடம் சூடும் உதயநிதி ஸ்டாலினை பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்தால் மணிமகுடமாய் திகழ்வோம் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Dec 14, 2022, 08:00 AM IST
  • அமைச்சராகும் உதயநிதி ஸ்டாலின்.
  • ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
  • உற்சாகத்தில் திமுக தொண்டர்கள்.
அமைச்சர் ஆனா உடனே உதயநிதிக்கு வந்த முதல் கோரிக்கை! title=

எந்த வித பிரஷ் பயன்படுத்தாமல் அரசர்கள் பதவியேற்பு அணிகலமாகிய "கிரீடத்தாலேயே" அமைச்சராகும் உதயநிதி ஸ்டாலின் உருவத்தை வரைந்து பகுதி நேர ஓவிய ஆசிரியர் அசத்தியுள்ளார்.  கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சு. செல்வம் அவர்கள் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்பதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக அந்த காலத்தில் மன்னர்கள் பதவியேற்பதற்கு தலையில் வைக்கும் கிரீடத்தை வைத்து உதயநிதி ஸ்டாலின் உருவத்தை வரைந்தார்.

ua

மேலும் படிக்க: தமிழகத்தில் ஒரு அங்கீகரிக்கப்படாத கட்டிடம் கூட இருக்கக்கூடாது: அமைச்சர் முத்துசாமி

அமைச்சராக பதவி ஏற்க போகும் உதயநிதி ஸ்டாலின் அவர்களை வாழ்த்து விதமாகவும், பகுதி நேர ஆசிரியர்களனா எங்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டியும்,  அந்த காலத்தில் மன்னர்கள் பதவி ஏற்கும் போது தலையில் கிரீடம் சூட்டுவார்கள். ஆகையால் பிரஷ் பயன்படுத்தாமல், "கிரீடத்தாலேயே" நீர் வண்ணத்தில் கிரீடத்தை தொட்டு உதயநிதி ஸ்டாலின் உருவத்தை 10 நிமிடங்களில் பகுதி நேர ஓவிய ஆசிரியர் செல்வம் வரைந்தார்.

ua

இந்த ஓவியத்தை பார்த்த பொதுமக்கள் மற்றும் திமுக-வினர்கள் ஓவிய ஆசிரியர் செல்வம்  அவர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.  இன்று எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்கிறார்.  முக்கிய துறை அவருக்கு ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது.  காலை 9 மணிக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

மேலும் படிக்க: ஆளுநர் கிரீன் சிக்னல்; உறுதியான உதயநிதி பதவியேற்பு.. கோட்டையில் தடபுடல் ஏற்பாடு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News