கோவை: குடிபோதையில் அலுவலகம் வந்த அரசு ஊழியர்

ஒரு பொறுப்பான பதவியில் இருக்கும் அதிகாரி நடந்து கொண்ட விதம் பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளதோடு அதிர்ச்சியையும் அளித்துள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 17, 2021, 01:35 PM IST
கோவை: குடிபோதையில் அலுவலகம் வந்த அரசு ஊழியர் title=

கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த வீரபாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் அசோக்குமார் என்பவர் குடிபோதையில் அலுவலத்திற்கு வந்து அலுவலக வாயிலில் அமர்ந்துள்ள வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
 
கோவை (Coimbatore) பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்து உள்ளது வீரபாண்டி பேரூராட்சி. இந்த பேரூராட்சிக்கு தற்போது புதிதாக விருதுநகர் மாவட்டத்தில் இருந்து அசோக்குமார் என்பவர் செயல் அலுவலராக கடந்த 1 வாரத்திற்கு முன்பு நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் இன்று பேரூராட்சி அலுவலகத்திற்கு அசோக்குமார் குடிபோதையில் வந்ததாக தெரிகிறது. அங்கிருந்தவர்கள் அவரது நிலையைப் பார்த்து, அவர் குடி போதையில் (Drunk) இருப்பதை தெரிந்து கொண்டு, வெளியில் பொதுமக்கள் பார்ப்பதாகவும், உள்ளே வந்து அமருமாறும் கூறியுள்ளார்கள். 

ALSO READ: ஆன்லைன் தேர்வு நடத்த கோரி போராட்டம் நடத்திய 700 மாணவர்கள் மீது வழக்கு! 

எனினும், அவர் அவர்கள் சொல்வதைக் கேட்காமல், உள்ளே சென்று அமராமல், குடிபோதையிலேயே அவர் வந்த காரை பிடித்தவாரே தள்ளாடியபடி நின்றுள்ளார். பின்னர், உள்ளே செல்ல முயன்ற அவர் போதை தலைக்கேரிய நிலையில் அலுவலக வாயில் படியிலேயே அமர்ந்துவிட்டார். 

இதைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அவரை கார் மூலம் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பிவிட்டுள்ளார். அது தற்போது வைரலாக (Viral Video) பரவி வருகிறது.

சமூகத்தில் முக்கிய பதவிகளில் இருக்கும் இவர் போன்ற அதிகாரிகள், மக்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டுமே தவிர, எள்ளி நகையாடும் அளவுக்கு அவர்களது நடவடிக்கைகள் இருக்கக் கூடாது. ஒரு பொறுப்பான பதவியில் இருக்கும் அதிகாரி நடந்து கொண்ட விதம் பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளதோடு அதிர்ச்சியையும் அளித்துள்ளது.

ALSO READ: கரூர் போக்சோ வழக்கில் பிரபல மருத்துவர் ரஜினிகாந்த் கைது 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News