Sasikala பரபரப்பு பேச்சு: ஊரடங்குக்குப் பிறகு சுற்றுப்பயணம், எதிர்ப்புகளுக்கு அஞ்ச மாட்டேன்

தமிழக அரசியல் பல திருப்பங்கள் நிறைந்த ஒரு திருவிழா என்பது அனைவருக்கும் தெரியும். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியவர்கள் ஏமாற்றுவதும், சாதாரணமாக இருப்பவர்கள் சாதித்துக்காட்டுவதும் இங்கே வாடிக்கையான விஷயம்தான்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 17, 2021, 01:20 PM IST
  • சசிகலாவின் தொலைபேசி அழைப்பு ஆடியோக்களால் பரபரப்பு.
  • ஊரடங்கு முடிந்தவுடன் சுற்றுப்பயணம் சென்று தொண்டர்களை சந்திப்பேன்-சசிகலா.
  • எதிர்ப்பவர்களை கண்டு அஞ்ச மாட்டேன் - சசிகலா.
Sasikala பரபரப்பு பேச்சு: ஊரடங்குக்குப் பிறகு சுற்றுப்பயணம், எதிர்ப்புகளுக்கு அஞ்ச மாட்டேன் title=

சென்னை: தமிழக அரசியல் பல திருப்பங்கள் நிறைந்த ஒரு திருவிழா என்பது அனைவருக்கும் தெரியும். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியவர்கள் ஏமாற்றுவதும், சாதாரணமாக இருப்பவர்கள் சாதித்துக்காட்டுவதும் இங்கே வாடிக்கையான விஷயம்தான்.

எனினும், முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் தோழியும், அதிமுக-வின் முக்கிய புள்ளியாகவும் இருந்த வி.கே. சசிகலா, சமீபத்தில் ஏமாற்றத்தை அளித்து தற்போது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறார். அதிமுக-வின் (AIADMK) ஒரு மிகப்பெரும் ஆளுமையாக இருந்த சசிகலா சிறை சென்றதைத் தொடர்ந்து அவரது அரசியல் வாழ்க்கை ஆட்டம் கண்டது. எனினும், சரியாக தேர்தலுக்கு முன்னால் விடுதலை ஆன அவர் பல அதிர்வலைகளை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத வண்ணம் அவர், அரசியலில் இருந்து விலகிக்கொள்வதாக தெரிவித்தார்.

எனினும், கடந்த சில நாட்களாக தான் மீண்டும் முழுநேர அரசியலுக்கு வர தயாராக உள்ளதாக அவர் பல வழிகளில் தெளிவுபடுத்தி வருகிறார். தான் மீண்டும் வருவேன் என்றும் கட்சியையும் தன்னையும் பிரிக்க முடியாது என்றும் அவர் பல தொண்டர்களுக்கு தோலைபேசி மூலம் கூறி வருகிறார். 

ALSO READ: AIADMK அதிரடி: சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய உறுப்பினர்கள் கட்சியிலிருந்து நீக்கம்

சமீபத்தில் ஒரு தொண்டருடன் பேசிய சசிகலா (Sasikala) , ஊரடங்கு முடிந்தவுடன், தொண்டர்களை சந்திக்க தான் ஒரு பெரிய சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள இருப்பதாகவும், எந்த விதமான எதிர்ப்பு வந்தாலும் பின்வாங்கப் போவதில்லை என்றும் கூறியுள்ளார்.

தேர்தலுக்கு முன்னர் அரசியலில் இருந்து விலகி இருக்கப்போவதாக அறிவித்த சசிகலா, தற்போது தினமும் தொண்டர்களுடன் தொலைபேசியில் பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். அவர் தொண்டர்களிடம் பேசிய ஆடியோக்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

ஒவ்வொரு தொண்டருடன் பேசும்போதும் சசிகலா ஒவ்வொரு முக்கிய விஷயத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் 
மதுரை மாவட்ட இலக்கிய அணி இணைச் செயலாளர் சுரேசிடம் பேசிய போது, தொண்டர்கள் தான் கட்சிக்கு பொதுச்செயலாளரை உருவாக்க முடியும் என்றும் இந்த விஷயத்தை யாரும் மாற்ற முடியாது என்றும் கூறினார். தனது உயிர் உள்ளவரை கட்சி வீணாகாமல் இருக்க பாடுபட தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

சிவகங்கையைச் சேர்ந்த சண்முகபிரியாவிடம் பேசிய சசிகலா, தான் கண்டிப்பாக மீண்டும் வந்துவிடப்போவதாகவும், யாரும் கவலைப் பட வேண்டாம் என்றும் தைரியம் கூறியுள்ளார். ஊரடங்கு முடிந்தவுடன் தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்திக்கவுள்ளதாகவும், எந்த எதிர்ப்புக்கும் தான் அஞ்சப்போவதில்லை என்றும் கூறியுள்ளார். 

முன்னதாக, சசிகலாவுடன் பேசிய சில உறுப்பினர்களை கட்சியிலிருந்து நீக்குவதாக மூன்று நாட்களுக்கு முன்னர் அதிமுக அறிவித்தது. மேலும், சேலத்தின் ஓமலூரில், இன்று கூடிய அதிமுக கூட்டத்தில் வி.கே. சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

ஊரடங்கு (Lockdown) முடிந்ததும், தமிழக அரசியலில் பல சலசலப்புகளை காண முடியும் என அரசிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுக கட்சி யாருக்கு என்பதில் பெரிய அளவிலான சச்சரவு கிளம்பக்கூடும். தொண்டர்கள் ஆதரவு எங்களுக்கே என்றும், அம்மாவின் வழியில் நாங்கள்தான் நடக்கிறோம் என்றும் இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பும், சசிகலா தரப்பும் அடித்துக் கூறும் நிலையில், தொண்டர்கள் யார் பக்கம் செல்வார்கள் என்பதை பார்ப்பது சுவாரசியமான விஷயமாக இருக்கும். 

ALSO READ: NEET தேர்வு குறித்த கருத்துக்களை பொதுமக்கள் அனுப்பலாம்: உயர்நிலைக்குழு அறிவிப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News