தமிழகத்தில் பிப்ரவரியில் பள்ளிகள் திறக்கப்படலாம்: அரசு கூறுவது என்ன?

எந்த நேரத்திலும் பள்ளிக்கு வந்து பணியைத் துவக்க தயாராக இருக்குமாறு அரசு ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 10, 2020, 12:29 PM IST
  • பிப்ரவரியில் பள்ளிகளைத் தொடக்க அரசு மும்முரம்.
  • தயாராக இருக்கும்படி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்.
  • கோவிட் தடுப்பு மருந்தில் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்க சுகாதாரத் துறையிடம் கோரிக்கை.
தமிழகத்தில் பிப்ரவரியில் பள்ளிகள் திறக்கப்படலாம்: அரசு கூறுவது என்ன?  title=

சென்னை: தமிழகத்தில் COVID-19 தொற்றின் எண்ணிக்கை குறைந்து வரும் நிகலையில், இறுதி ஆண்டு இளங்கலை (UG) மற்றும் முதுகலை (PG) வகுப்புகளை அரசு மீண்டும் தொடக்கியது. முதலாண்டு வகுப்புகளைத் தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது மாநில அரசு பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பல்வேறு தரப்பினரிடம் கலந்தாலோசித்து வருகிறது. குறிப்பாக பொதுத் தேர்வுகள் உள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை மீண்டும் திறக்க மும்முரமான நடவடிகைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பள்ளி கல்வித் துறையின் மூத்த அதிகாரி ஒருவர், அனைத்து பள்ளிகளும், குறிப்பாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் எந்த நேரத்திலும் திறக்கத் தயாராக உள்ளன என்று கூறினார். இருப்பினும், நவம்பரில் பள்ளிகளை மீண்டும் திறக்கும் அரசின் முடிவுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், தமிழக அரசு (Tamil Nadu Government) அதை ஒத்திவைக்க வேண்டியிருந்தது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

"பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து அதிகாரிகள் சுகாதார நிபுணர்களுடன் கலந்தாலோசிக்கத் தொடங்கியுள்ளனர். கல்லூரிகளுடன் சேர்ந்து, உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பிப்ரவரி முதல் நிலைமைக்கு ஏற்ப வகுப்புகள் தொடங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது” என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது குறித்து பெற்றோரிடமிருந்து கருத்துக்களை சேகரிக்க மேலும் ஒரு அமர்வை நடத்த ஒரு திட்டம் உள்ளது. "இந்த பின்னூட்ட அமர்வு வார இறுதி நாட்களில் பள்ளிகளில் நடைபெறும். வார இறுதி நாட்களில் நடப்பதால், இதில் அனைத்து பெற்றோர்களும் பங்கேற்க முடியும்," என்று அவர் மேலும் கூறினார்.

பெற்றோர்களைத் தவிர, ஆன்லைன் அமர்வின் (Online Classes) போது நிறைவு செய்யப்பட்ட பாடப்பகுதிகள் குறித்து தனியார் பள்ளிகள் உட்பட ஆசிரியர்களிடமிருந்து கருத்துக்கள் பெறப்படும். இதன் அடிப்படையில் அரசாங்கம் வகுப்புகளுக்கான, குறிப்பாக, பொதுத் தேர்வு வகுப்புகளுக்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களை வெளியிட முடியும்.

ALSO READ: CBSE Board Exams 2021: இந்த வாரம் வெளிவருகிறது 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் date sheet

ஸ்மார்ட்போன்கள் இல்லாத மாணவர்களுக்கு எடுக்கப்பட்டுள்ள பாட விவரங்கள் பற்றியும் தெரிவிக்கும்படி அரசு பள்ளி ஆசிரியர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

COVID-19 தடுப்பூசி திட்டத்தின் போது பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்க சுகாதாரத் துறையை வலியுறுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். "ஆசிரியர்களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படும்" என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.

எந்த நேரத்திலும் பள்ளிக்கு வந்து பணியைத் துவக்க தயாராக இருக்குமாறு அரசு ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். தற்போது, ​​தொடக்கநிலை முதல் உயர்நிலை நிலை வரையிலான ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுப்பதைத் தவிர வருகை பதிவேட்டில் கையெழுத்திட பள்ளிக்கு தொடர்ந்து வருகிறார்கள்” என்றார் அவர்.

ALSO READ: 2021 ஆம் ஆண்டின் 10, 12, NEET, JEE தேர்வுகளை தள்ளிப்போடுமா CBSE?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News