சென்னை: வடகிழக்கு பருவப் பெயர்ச்சிக் காற்று மழை ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பெய்யும். இந்த வடகிழக்கு பருவமழை மூலம் தான் தமிழகத்திற்கு அதிக அளவில் மழை கிடைகிறது. தமிழக கடலோர மாவட்டம் 60% மழையும், உள் மாவட்டங்கள் 40% - 50% மழை பொழிவையும் பெறுகின்றன. விரைவில் வடகிழக்கு பருவமழையை தொடங்கயுள்ளது. இதனால் தமிழகத்தில் மழையின் காரணமாக எந்தவித அசம்பாவிதமும், மக்களுக்கு இடையுறு ஏற்ப்படாமல் இருக்க வடகிழக்கு பருவமழையை சமாளிக்கவும், அதற்க்கான என்னனென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
அந்த ஆலோசனை கூட்டத்தில், மழை அதிக அளவில் பெய்தால், அவர்களுக்கு உடனடியாக உதவிகள் வழங்கிட மருத்துவக்குழுவும், மழையின் காரணமாக வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகள் ஏற்பட்டால், மக்களை பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்ல மீட்புக் குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
அதிக மழையின் காரணமாக சாலைகளை தேங்கும் நீரை வெளியேற்ற மின் மோட்டார்களை தயார் நிலையில் வைப்பது. அதே சமயத்தில் அதிக காற்றின் காரணமாக கீழே விழும் மரங்களை உடனே அகற்ற தேவையான ஆட்கள் போன்றவை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் ரேசன் கடைகளில் தேவையான இருப்பு, போதுமான அளவுக்கு மருந்து பொருட்கள் போன்றவற்றை முன்கூட்டியே கையிருப்பு வைத்திருக்க வேண்டும். அரசு மற்றும் அரசுசாரா மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
மக்களுக்கு எந்தவித பாதிப்பும் வராமல் இருக்க, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை சமாளிக்க முன்னெச்சரிக்கையாக 38 கோடியே 52 லட்சம் ரூபாயை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஒதுக்கீடு செய்துள்ளார்.