நான் படிச்ச காலத்தில...! மாணவர் பருவத்தை நினைவுகூர்ந்த தமிழ்நாடு ஆளுநர்...

TN Governor RN Ravi Speech: மகாத்மா காந்தி போன்ற வாழ்வில் சாதித்தவர்கள் குறித்த புத்தகங்களை மாணவர்கள் அதிகம் படிக்க வேண்டும் என மாணவர்கள் மத்தியில் ஆளுநர் பேச்சு

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 8, 2024, 03:54 PM IST
  • சாதனையாளர்களை அறிந்துக் கொள்ளுங்கள்!
  • உங்களை தயார் படுத்திகொண்டால் வாய்ப்புகள் தேடி வரும்
  • பள்ளி மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர் என் ரவி அறிவுரை
நான் படிச்ச காலத்தில...! மாணவர் பருவத்தை நினைவுகூர்ந்த தமிழ்நாடு ஆளுநர்... title=

தொழில்நுட்பத்தை மாணவர்கள் தேவையான அளவிற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் அளவுக்கு மீறி பயன்படுத்தினால் அது உங்களை அழித்துவிடும் என பள்ளி மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர் என் ரவி அறிவுரை வழங்கினார். மேலும், மகாத்மா காந்தி போன்ற வாழ்வில் சாதித்தவர்கள் குறித்த புத்தகங்களை மாணவர்கள் அதிகம் படிக்க வேண்டும் என மாணவர்கள் மத்தியில் ஆளுநர் பேசினார். 

தேனியில் தனியார் பள்ளியில்   நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுடன் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி கலந்துரையாடினார். அப்போது நிகழ்ச்சி மேடையில் பேசிய ஆளுநர் நாட்டின் எதிர்கால தலைவர்களாகிய மாணவர்கள் உங்கள் முன்பு அமர்ந்து இருப்பது பெருமையாக கருதுகிறேன் என்று கூறினார். பின்னர் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களது கேள்விக்கு பதில் அளித்தார்

கிராம பகுதியில் இருக்கும் மாணவர்களுக்கு பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைய  தொழில்நுட்பம் மட்டும் போதுமா? என்ற மாணவியின் கேள்விக்கு பதில் அளித்த ஆளுநர், தொழில்நுட்பம் மட்டும் போதாது உலகத்தில் பல்வேறு பகுதியில் என்ன நடக்கிறது என்பது குறித்து கிராம பகுதியில் இருப்பவர்களுக்கு தொழில்நுட்பத்தின் மூலம் தான் தெரிய வருகிறது அதை தேவைக்கு மட்டும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் அளவுக்கு மீறினால் அது உங்களை அழித்துவிடும் என்று கூறினார்.

மேலும் படிக்க | அண்ணாமலை அல்ல, அவரது அப்பனே வந்தாலும் முடியாது -அதிமுக ஆர்.பி.உதயகுமார்

வாய்ப்புகள் உங்கள் வழியில் வரும் போது அதனை நீங்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும், நீங்க உங்களை தயார் படுத்திகொண்டால் வாய்ப்புகள் உங்களை தேடி வரும் என்றும், வாய்ப்புகளை நீங்கள் உருவாக்க வேண்டும் தவறவிட்ட வாய்ப்புகளை நினைத்து கவலை பட தேவை இல்லை என்றும் ஆளுநர் மாணவர்களிடம் தெரிவித்தார்.

நான் மிகவும் கிராம பகுதியில் இருந்து வந்தவன் என் கிராமத்தில் 12 ஆம் வகுப்பு வரை தான் இருந்தது என்று தனது மாணவர் பருவத்தை நினைவுகூர்ந்த தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, எங்கள் கிராமத்தில் இரவு நேரத்தில் மின்சார வசதி கூட இருக்காது மொட்டை மாடியில் தான் படுப்பேன் வானில் இருக்கும் நட்சத்திரங்களை பார்த்து கனவு காண்பேன் என்று தெரிவித்தார்.

நீங்கள் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருந்தால் வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் என்று ஊக்கம் கொடுத்த ஆளுநர், கதைகள் கொண்ட புத்தகங்களை மாணவர்கள் அதிகம் படிப்பதாக தெரிகிறது அது தவறில்லை ஆனால் உங்களை வளர்த்துக்கொள்ள  மகாத்மா காந்தி குறித்த புத்தகங்கள் மற்றும் வாழ்வில் சாதித்தவர்கள் குறித்த புத்தகங்கள் குறித்து படியுங்கள் என்று அறிவுரை வழங்கினார்.

மேலும் படிக்க | கருத்து கணிப்பை தாண்டி தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்: திருச்சியில் கி.வீரமணி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News