டெல்லி உயர்நீதிமன்றத்தில் தினகரன் தரப்பு தனது அணிக்காக 3 பெயர்களை பரிந்துரை செய்துள்ளார்.
கடந்த ஆர்கே நகர் இடைத்தேர்தலில் அதிமுக அம்மா அணி சார்பில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் தினகரன். இதைத் தொடர்ந்து அதிமுகவை கைப்பற்ற முயற்சித்தும் முடியவில்லை.
இதனால் அதிமுக அம்மா அணி என்ற பெயரில் செயல்படுவதற்கும் குக்கர் சின்னம் கோரியும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஆர்.கே.நகர் சுயேட்சை எம்.எல்.ஏ. தினகரன் மனுத் தாக்கல் செய்திருந்தார். ஆனால் தினகரனின் இந்த கோரிக்கையை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
இந்நிலையில், தினகரன் தரப்பு தனது அணிக்காக அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்ற கழகம், அம்மா எம்ஜிஆர் முன்னேற்ற கழகம், எம்ஜிஆர் அம்மா முன்னேற்ற கழகம் என்ற 3 பெயர்களை டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.