திமுக கூட்டணியில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடுகள் நிறைவடைந்து, கூட்டணிக் கட்சிகள் எல்லாம் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் மட்டும் இன்னும் வெளியாகவில்லை. அதுவும் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாக இருக்கும் நிலையில், திமுக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் மார்ச் 22 ஆம் தேதி முதல் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ள இருக்கிறார். 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு திருச்சி சிறுகனூரில் இருந்து தன்னுடைய முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய நிலையில், 2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தையும் அதே இடத்தில் இருந்தே தொடங்குகிறார்.
மேலும் படிக்க | ’ஜாதிவெறி பேச்சு’ நாமக்கல் வேட்பாளரை மாற்ற கோரிக்கை! திமுக தலைமை கவனிக்குமா?
சிறுகனூரில் நடைபெறும் திமுகவின் முதல் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் திமுக கூட்டணியில் திருச்சி வேட்பாளராக போட்டியிடும் மதிமுக தலைமை நிலைய செயலாளர் மற்றும் வைகோ மகன் துரை வைகோவுக்கு ஆதரவாக அவர் வாக்குகள் சேகரிக்க இருக்கிறார். திமுகவின் கோட்டையாக பார்க்கப்படும் திருச்சி தொகுதியை கடந்த முறை காங்கிரஸூக்கு ஒதுக்கிய திமுக இந்த முறை மதிமுகவுக்கு ஒதுக்கியிருக்கிறது. இது அமைச்சர்கள் கேஎன் நேரு மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோரின் சொந்த மாவட்டமாகும். இந்தக் கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் எல்லாம் நேரடியாக கலந்து கொள்ள இருக்கின்றனர்.
அமைச்சர் கே.என்.நேரு மாநாடு நடக்க இருக்கும் இடத்திற்கு சென்று பணிகளை இன்றே தொடங்கிவிட்டார். பிரம்மாண்டமாக இம்மாநாடு நடத்தப்படுவதற்கான முழு பொறுப்பையும் அமைச்சர் கே.என். நேரு ஏற்றுக் கொண்டிருக்கிறார். துரை வைகோ வேட்பாளராக அறிமுகமாகும் இந்த கூட்டத்தில் அமைச்சர் கேஎன் நேருவுக்கு ஆதரவான அறிவிப்பும் வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பு திருச்சி திமுக தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏனென்றால், திருச்சி தொகுதிக்கு அருகாமையில் இருக்கும் பெரம்பலூர் தொகுதி இம்முறை அமைச்சர் கே.என்.நேரு மகன் அருண் நேருவுக்கு ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது. திமுக தலைமையிடம் அருண் நேரு போட்டியிட வேண்டும் என 200க்கும் மேற்பட்டோர் மனு அளித்துள்ளனர்.
அதனால், திமுக வேட்பாளர் பட்டியல் இன்னும் இரண்டு நாட்களுக்குள் வெளியாகிவிட்டால் பெரம்பலூர் தொகுதி வேட்பாளராக அருண் நேருவும் இந்த மேடையில் அலங்கரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அமைச்சர் கேஎன் நேரு மட்டுமல்லாது அவரது ஆதரவாளர்களும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றனர். தலைமை பெரம்பலூர் தொகுதி வேட்பாளராக அருண் நேருவை அறிவித்துவிட்டால், திருச்சி சிறுகனூர் மாநாடு இன்னும் இரட்டிப்பு பிரம்மாண்டமாக மாறிவிடும். அதற்கான பணியை அமைச்சர் நேரு முழுமூச்சாக இறங்கி செய்வார் என தொண்டர்கள் கூறுகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ