தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வெற்றிகரமாக நேற்று விக்கிரவாண்டியில் நடைபெற்றது. மிகப்பெரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் தொண்டர்கள் அணி திரள இந்த மாநாடு நடைபெற்றது. மாலை 4 மணிக்கு தான் நிகழ்ச்சி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட போதிலும் காலை முதலே லட்சக்கணக்கான தொண்டர்கள் விக்கிரவாண்டியில் மாநாடு நடைபெறும் இடத்தில் குவிந்தனர். கட்டுக்கடங்காத அளவிற்கு கூட்டம் வந்ததால் நிகழ்ச்சி சற்று முன்னதாகவே ஆரம்பிக்கப்பட்டது. முதலில் கட்சி நிர்வாகிகள் பேச பிறகு விஜய் வழக்கம்போல தனது அதிரடியான பேச்சை தொடங்கினார்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேல் பேசிய விஜய் தனது கட்சியின் நிலைப்பாடு, கொள்கைகள், யாரை எதிர்க்க போகிறோம் என்பதை தெளிவாக பேசி இருந்தார். மேலும் நாம் யாரையும் குறை சொல்ல போவதில்லை என்றும், நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை மட்டுமே பேசுவோம் என்றும் தெரிவித்திருந்தார். திமுக மற்றும் பாஜகவை நேரடியாக எதிர்க்க போவதாகவும் விஜய் தெரிவித்து இருந்தார். இது தமிழக அரசியலில் ஒரு வித சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மாநாட்டில் விஜய் அறிவித்த தமிழக வெற்றி கழக கட்சியின் கொள்கைகள் பற்றி பார்ப்போம்.
மேடையில் புஸ்ஸி ஆனந்தை தோளில் தூக்கி கொண்டாடிய தவெக நிர்வாகிகள்! #tvkmaanaduparking #tvkmaanaduliveupadate #tvkmaanadustage #tvkmaanadustageDecoration #tvkflaghost #thalapathyvijay #tvkmaanaduguest #actorstvkmaanadu #thalapathyvijay #tvkmaanadu #tvkmaanaduupdate #zeetamilnews pic.twitter.com/hAqU2k2Gs5
— Zee Tamil News (@ZeeTamilNews) October 27, 2024
மேலும் படிக்க | தமிழகத்தை கொள்ளையடிக்கும் திராவிட மாடல் ஆட்சி-விஜய் அட்டாக்!!
தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொள்கைகள்
மதம், சதி, நிறம், இனம், மொழி, பாலினம், பொருளாதாரம் இல்லாமல், அனைவரும் சமமாக நடத்தப்படுவதை உறுதிசெய்தல்.
அரசாங்கத்தில் ஜனநாயக உரிமைகளை நிலை நாட்டுவது.
அனைத்துப் பிரிவினருக்கும் அனைத்துத் துறையிலும் விகிதாச்சாரத்தின் படி பிரதிநிதித்துவம் வழங்குவது.
பெண்கள், மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத் திறனாளிகளுக்குச் சமத்துவம் வழங்கப்படும்.
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற சமத்துவ கொள்கையை கடைப்பிடிப்போம்
அனைத்து மக்களையும் பாகுபடுத்தாமல், சம உரிமைகளை வகுக்க வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு நல்லது செய்யாத செயல்களுக்கு எதிராக நிற்போம்.
தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கையே தொடரும்.
மாநில தன்னாட்சிக்கு உட்பட்ட உரிமைகளை மீட்பது.
தமிழை வழக்காடு மொழியாக்குவது.
மதுரையில் தலைமைச் செயலகத்தின் ஒரு பகுதி திறக்கப்படும்.
பதநீர் தமிழகத்தின் சிறப்பு பானமாக பெயரிடப்படும்.
பிற்போக்கு சிந்தனைகளை நிராகரிப்பது
அரசு, தனியார் துறையில் நேர்மையான மற்றும் நியாயமான நிர்வாகம்.
தமிழகத்தை யாரும் போதைப்பொருள் பயன்படுத்தாத மாநிலமாக மாற்ற ஒன்றிணைவோம்.
சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாப்போம்
அரசாங்கத்தில் வேலை செய்பவர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் கதர் சிறப்பு ஆடைகளை அணிய வேண்டும்.
தமிழகத்தின் பல பகுதிகளிலும் புதிய நீர்த்தேக்கங்கள் கட்டப்படும்.
கவர்னர் பணி தமிழகத்தில் இருந்து அகற்றப்படும்.
ஒவ்வொரு பகுதியிலும் காமராஜர் மாதிரி பள்ளிகள் உருவாக்கப்படும்.
ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தப்படும்
தமிழில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
மேலும் படிக்க | தவெக மாநாடு | 7 மணி கெடு.. காவல்துறை முக்கிய மெசேஜ், பரபரக்க மேடைக்கு வந்த விஜய்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ