சிவப்பு நிறத்தில் மாஸ் காட்டுமா ஓலாவின் புதிய அறிமுகம்?

August 15 OLA launch: ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஒரு புதிய தயாரிப்பை அறிவிப்பதில் மிகவும் உற்சாகமாக இருக்கும் ஓலாவின் லேட்டஸ்ட் அப்டேட்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 6, 2022, 09:32 AM IST
  • ஆகஸ்ட் 15 அன்று ஓலா எலக்ட்ரிக் புதிய தயாரிப்பு அறிமுகம்
  • ஓலாவின் முதல் மின்சார கார் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிமுகமாகலாம்
  • இதைத் தவிர வேறு சர்ப்ரைஸ் செய்தியையும் அறிவிக்குமா ஓலா
சிவப்பு நிறத்தில் மாஸ் காட்டுமா ஓலாவின் புதிய அறிமுகம்?  title=

ஒலாவின் புதிய வாகன அறிமுகம்: ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் ஆகஸ்ட் 15 அன்று இந்தியாவின் சுதந்திர தினத்தன்று ஒரு பெரிய நிகழ்வை திட்டமிட்டுள்ளது. நிறுவனத்தின் முதல் மின்சார கார் ஆகஸ்ட் 15 ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வரவிருக்கிறது. ஆனால், வேறு சில ஆச்சரியங்களையும் நிறுவனம் கொடுக்கலாம் என்று சூசகமாக சொல்கிறார் Ola CEO பவிஷ் அகர்வால். ட்விட்டரில் அவர் பதிவிட்ட சமீபத்திய கேள்வி ஒன்று அதை உறுதிப்படுத்துகிறது. ஓலா எலக்ட்ரிக் காரைத் தவிர, "குறைந்த விலையில்" புதிய ஓலா எஸ்1 இருக்கலாம் என்று அனுமானிக்கப்படுகிறது.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியீட்டு விழா குறித்த டீஸரை அகர்வால் முன்பு ட்வீட் செய்தார். டீஸர் உண்மையில் பிரத்தியேகங்களை வெளிப்படுத்தவில்லை என்றாலும், ஓலா தலைவர் "இந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஒரு புதிய தயாரிப்பை அறிவிப்பதில் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

 

"எங்கள் பெரிய எதிர்கால திட்டங்களைப் பற்றி மேலும் பகிர்ந்து கொள்வேன்" என்று அகர்வால் மேலும் கூறினார். இது நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோ விரிவாக்கம் பற்றிய பகுதியை உறுதிப்படுத்துகிறது. உதாரணமாக, ஓலா செல் தொழிற்சாலை தொடர்பான செய்தியாகவும் இருக்கலாம்.

ஆனால் ஓலாவின் எலெக்ட்ரிக் கார் தொடர்பான முன்னோட்ட காட்சிகளை வெளியிட்டுள்ளது. ஜூன் மாதம் ஓலா வாடிக்கையாளர் தினத்தில், அதன் எல்இடி டிஆர்எல்களை சிவப்பு நிறத்தில் காட்டும் காரின் வீடியோ டீசரைப் பகிர்ந்துள்ளது.

மேலும் படிக்க | வாட்ஸ் அப் பேமெண்டில் நடக்கும் நூதன மோசடி

காரின் முன் மற்றும் பின்புற வடிவமைப்பும் டீசரின் ஒரு பகுதியாக இருந்தது. ஓலா லோகோ இருபுறமும் தோன்றியது. ஓலா எலக்ட்ரிக் காரைப் பற்றிய வேறு எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. 4 கதவுகளுடன் கூடிய கூபே-ஸ்டைல் ​​ரூஃப்லைனைக் கொண்டிருக்கலாம் என்று ஊகங்கள் இருக்கின்றன.

Ola தனது பணியாளர்களின் கணிசமான அளவில் பணிநீக்கங்கள் செய்ததும், ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் பல உயர் அதிகாரிகள் கடந்த சில மாதங்களில் ராஜினாமா செய்ததும் நிறுவனத்தின் வணிகக் கண்ணோட்டம் குறித்த கேள்விகளை எழுப்பியது. ஓலாவின் போட்டியாளரான உபெருடன் வணிகத்தை இணைப்பது தொடர்பாகவும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தெரிவித்திருந்தார்.

“நாங்கள் மிகவும் லாபகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறோம். நன்றாக வளர்ந்து வருகிறோம். வேறு சில நிறுவனங்கள் தங்கள் வணிகத்தை இந்தியாவிலிருந்து விலக்கிக் கொள்ள விரும்பினால், அது அவர்களின் விருப்பம்! நாங்கள் ஒருபோதும் இணைய மாட்டோம்” என்று அகர்வால் தனது அண்மை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | மணிக்கு 1300 KM மேக்னடிக் ரயில் அதிவேக ஹைப்பர்லூப்பை உருவாக்க திட்டமிடும் எலோன் மஸ்க்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News