Upcoming Cars: இந்த மாதம் அறிமுகம் செய்யப்படும் 4 கார்களில் 2 மாருதி கார்களும்!

மாருதி சுஸுகி முதல் ஹூண்டாய் மற்றும் கியா கார்கள் என இந்த மாதம் 4 புதிய கார்கள் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படலாம்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 4, 2022, 02:19 PM IST
  • பிப்ரவரியில் அறிமுகமாகவிருக்கும் கார்கள்
  • 2 மாருதி சுஸுகி கார்கள் இந்த மாதம் சந்தைக்கு வருகிறது
  • கியா தனது புதிய கேரன்ஸ் எம்பிவியை அறிமுகப்படுத்துகிறது
Upcoming Cars: இந்த மாதம் அறிமுகம் செய்யப்படும் 4 கார்களில் 2 மாருதி கார்களும்! title=

புதுடெல்லி: இந்த மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த 4 கார்களும் சந்தையில் பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன. இந்தப் பட்டியலில் 2 மாருதி கார்கள் இடம்பெற்றுள்ளன.

மாருதி சுஸுகி முதல் ஹூண்டாய் மற்றும் கியா கார்கள் என இந்த மாதம் 4 புதிய கார்கள் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படலாம். மாருதியின் இரண்டு கார்களும் வாடிக்கையாளர்களின் விருப்பமானவை.

பிப்ரவரியில், பல வாகன உற்பத்தியாளர்கள் தங்கள் புதிய கார்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளனர்.

மாருதி சுஸுகியில் இருந்து கியா மற்றும் ஹூண்டாய் வரை இந்த மாதம் தங்கள் வாகனங்களை அறிமுகப்படுத்தலாம். இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பிரீமியம் ஹேட்ச்பேக் காரான பலேனோவின் ஃபேஸ்லிஃப்ட் மாடலும் இதில் அடங்கும்.  

Car

மாருதி சுஸுகி வேகன்ஆர் ஃபேஸ்லிஃப்ட் 

கடந்த இரண்டு மாதங்களாக இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் வேகன்ஆர் ஆகும், இதன் ஃபேஸ்லிஃப்ட் மாடல் (Maruti Suzuki WagonR Facelift) மாருதி சுஸுகி பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்படலாம். அதன் புதிய மாடல் சிறிய மாற்றங்களுடன் அறிமுகப்படுத்தப்படும். 

புதிய வண்ணங்களில் புதிய வேகன்ஆர்  

காரின் பம்பர்களில் மாற்றம் இருக்கலாம் மற்றும் புதிய வேகன்ஆர் (New WagonR in new colors) புதிய வண்ணங்களிலும் அறிமுகப்படுத்தப்படலாம். 7-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு ஆகியவற்றுடன் பவர் ஃபோல்டிங் ORVMகள் 2022 வேகன்ஆருடன் முன்பு போலவே கொடுக்கப்படலாம்.

ALSO READ | '27,000,000 mAh' உலகிலேயே மிகப்பெரிய பவர்பேங்க் 

ஹூண்டாய் கோனா ஃபேஸ்லிஃப்ட்
ஹூண்டாய் நிறுவனம் தனது எலக்ட்ரிக் எஸ்யூவியான கோனாவின் ஃபேஸ்லிஃப்ட் ( hyundai kona facelift) மாடலை இந்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தலாம்.

இது தவிர, ஹூண்டாயின் சகோதர நிறுவனமான கியா தனது புத்தம் புதிய எலக்ட்ரிக் கார் EV6 ஐ விரைவில் சந்தையில் கொண்டு வரலாம். EVக்கு என புதிய வடிவமைப்பு ஹெட்லேம்ப்கள் மற்றும் மாற்றப்பட்ட பம்பர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஹூண்டாய் கோனா ஃபேஸ்லிஃப்ட்டின் விலை ரூ. 24 லட்சமாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ALSO READ | Honda கார் வாங்க திட்டமா? அதிரடி தள்ளுபடி 

BlueLink இணைக்கப்பட்ட தொழில்நுட்பம்
EV புதிய அலாய் வீல்களுடன் அறிமுகப்படுத்தப்படலாம். 10.25-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், புதுப்பிக்கப்பட்ட புளூலிங்க் இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பம் மற்றும் பல நவீன அம்சங்களைப் பெறுகிறது.

எலக்ட்ரிக் எஸ்யூவியில் 39.2 கிலோவாட்-ஆர் பேட்டரியுடன் 136 பிஎச்பி மின்சார மோட்டார் கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர, நிறுவனம் புதிய ஹூண்டாய் கோனாவுக்கு அதிக திறன் கொண்ட பேட்டரி பேக்கை வழங்கியுள்ளது.

கியா கேரன்ஸ் எம்பிவி  
கியா மோட்டோரா இந்தியா தனது அனைத்து புதிய 6 மற்றும் 7-சீட்டர் MPV உடன் இந்த மாதம் வருகிறது, அதற்கான முன்பதிவை நிறுவனம் தொடங்கியுள்ளது.

மாருதி சுஸுகி எர்டிகா முதல் இன்னோவா கிரிஸ்டா போன்றவை இந்தியாவில் வாடிக்கையாளர்களின் முதல் தேர்வாக உள்ளது.

அத்தகைய சூழ்நிலையில், இந்த MPVயின் வெற்றிக்கு ஒரே ஒரு வழி உள்ளது. அதுதான் அதன் விலை. குறைந்த விலையில் பலமான வசதிகளுடன் இதனை நிறுவனம் கொண்டு வந்தால் போட்டியில் வெற்றி பெறும்.  

ALSO READ | Second Hand Cars! மலிவு விலையில் செகண்ட் ஹாண்ட் கார்! ஹோண்டாவின் சூப்பர் ஆஃபர்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News