iPhone பிரியர்களுக்கு அட்டகாச செய்தி: iPhone 14 பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ

இந்த நடவடிக்கை ஆப்பிள் நிறுவனத்திற்கும் பயனளிக்கிறது. ஏனெனில் இதன் மூலம், ஆப்பிள் நிறுவனம், தனது அனைத்து முதன்மை ஸ்மார்ட்போன்களின் டிஸ்ப்ளே பேனல்களுக்கு சாம்சங்கை சார்ந்திருக்கும் நிலை சற்று குறைகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 24, 2021, 12:09 PM IST
iPhone பிரியர்களுக்கு அட்டகாச செய்தி: iPhone 14 பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ title=

ஐபோன் 14 ப்ரோ மேக்ஸின் விவரங்கள் தொடர்பான ரெண்டர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் கசிந்தன. இதில் பஞ்ச்-ஹோல் கேமரா வடிவமைப்பு காட்டப்பட்டுள்ளது. விவரங்கள் கசிந்தபிறகு, பிரபலமான ஆப்பிள் போன் ஆய்வாளர் குவோ, ஐபோன் X உடன் அறிமுகப்படுத்தப்பட்ட பழைய நாட்ச் வடிவமைப்பை ஐபோன் 14 ப்ரோ மாடலில் தொடங்கி "பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே டிசைன்" மூலம் மாற்ற ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். 

இப்போது, ​​​​எல்ஜி மற்றும் சாம்சங் (Samsung), ஐபோன் 14 தொடருக்கான பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளேக்களை வழங்கும் என்று புதிய அறிக்கைகள் வெளிவந்துள்ளன.

புதிய அறிக்கையில் புதிய வெளிப்பாடு

The Alec இன் அறிக்கையின்படி, தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங், 6.7-இன்ச் ஐபோனுக்கான ஆர்டரைப் பகிர்ந்து கொள்ளும். மேலும், 6.1-இன்ச் iPhone 14 Pro க்கான அனைத்து துளை-மைய பேனல்களையும் வழங்கும். இது ஆப்பிளின் முன்னணி OLED பேனல் சப்ளையர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், அடிப்படை மாடல் ஐபோன் 14-ல், மினி மாறுபாட்டுடன் நாட்ச் ஸ்டைல் ​​டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ | Budget Mobile: ரூ.10,000-க்கு குறைவான விலையில் இருக்கும் ஸ்மார்ட்போன்கள்..! 

இதன் மூலம் ஆப்பிள் பயனடையும்

இந்த அறிக்கை எல்.ஜி-க்கு நல்ல செய்தியை கொண்டு வந்துள்ளது. முன்னதாக, எல்.ஜி, ஐபோன் 13 (iPhone 13) சீரிஸ் டிஸ்ப்ளேக்களுக்காக ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து எந்த ஆர்டரையும் பெற முடியாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. கூடுதலாக, இந்த நடவடிக்கை ஆப்பிள் நிறுவனத்திற்கும் பயனளிக்கிறது. ஏனெனில் இதன் மூலம், ஆப்பிள் நிறுவனம், தனது அனைத்து முதன்மை ஸ்மார்ட்போன்களின் டிஸ்ப்ளே பேனல்களுக்கு சாம்சங்கை சார்ந்திருக்கும் நிலை சற்று குறைகிறது. 

இப்போது, ​​ஒரே கேள்வி என்னவென்றால், பஞ்ச்-ஹோல் முன் கேமராவுடன் ஃபேஸ்-ஐடி அம்சம் எவ்வாறு செயல்படும் என்பதுதான். ஏற்கனவே தெரிந்தபடி, ஆப்பிள் அதன் ஃபேஸ்-ஐடி அன்லாக் அம்சத்தை இயக்க பல சென்சார் அமைப்பைப் பயன்படுத்துகிறது. இந்த சென்சார்கள், அதாவது ஃப்ளட் இலுமினேட்டர், டாட் ப்ரொஜெக்டர் மற்றும் ஐஆர் கேமரா ஆகியவை ஐபோன் எக்ஸ் முதல் அதன் அனைத்து சாதனங்களிலும் ஆப்பிள் மூலம் நேர்த்தியாக வைக்கப்பட்டுள்ளன. 

வரவிருக்கும் சாதனங்களில் இந்த சென்சார்களை வைக்க அண்டர்-டிஸ்பிளே அமைப்பு பயன்படுத்தக்கூடும் என்று ஆப்பிள் (Apple) ஆய்வாளர்கள் மற்றும் தொழில்துறையினர் ஊகித்துள்ளனர்.

ALSO READ | ஜனவரியில் வருகிறது OnePlus 10 Pro! என்னென்ன சிறப்பம்சங்கள்? 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News