சந்திர கிரகணம் 2020: நேரம், பரிகாரம் செய்ய வேண்டிய ராசி, நட்சத்திரத்திரங்கள் எவை?

இந்த மாதத்தில் நிகழும் சந்திரகிரகணத்தை ஸ்ட்ராபெரி சந்திர கிரகணம் என்று அழைக்கின்றனர். இளஞ்சிவப்பு நிறந்தில் காணப்படும் முழு நிலவை யாரோ வாயை வைத்து ஒரு கடித்தது போல நிழல் மறைத்திருக்கும்.அதனால்தான், இந்த மாதத்தில் நிகழப்போகும் பெனும்பிரல் சந்திர கிரகணத்தை ஸ்ட்ராபெரி சந்திர கிரகணம் எனப் பெயர் வைத்துள்ளனர்.

Last Updated : Jun 5, 2020, 12:11 PM IST
    1. இந்த ஆண்டு அதன் முதல் சந்திர கிரகணத்தை ஜனவரி 10 ஆம் தேதி கண்டது
    2. பெனும்பிரல் சந்திர கிரகணம் முறையே ஜூன் 5-6 இடைப்பட்ட இரவில் உள்ளது
    3. மூன்று மணி நேரம் 19 நிமிடங்கள் வரை இந்த நிகழ்வு நீடிக்கிறது

Trending Photos

சந்திர கிரகணம் 2020: நேரம், பரிகாரம் செய்ய வேண்டிய ராசி, நட்சத்திரத்திரங்கள் எவை? title=

புதுடெல்லி: 2020 ஆம் ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் இன்று நடைபெறும். ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, தெற்கு / கிழக்கு தென் அமெரிக்கா, பசிபிக், அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடல் மற்றும் அண்டார்டிகா ஆகிய நாடுகளில் சந்திர கிரகணம் தெரியும். இந்தியாவில் உள்ளவர்கள் இரவு 11.15 மணிக்கு சந்திர கிரகணத்தைக் காணலாம்.

சந்திர கிரகணம் ஜூன் 5 ஆம் தேதி இரவு 11:15 மணிக்கு தொடங்கி ஜூன் 6 ஆம் தேதி அதிகாலை 2:34 மணிக்கு முடிவடையும். மொத்த காலம் மூன்று மணி 19 நிமிடங்கள். கிரகணம் அதன் முழு கட்டத்தில் அதிகாலை 12:54 மணிக்கு தெரியும்.

READ | சந்திர கிரகணம் 2020: இந்திய நேரம், தேதி என்ன

 

சந்திர கிரகணத்தின் போது, பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் நகர்கிறது. சந்திர கிரகணத்தில் மூன்று வகைகள் உள்ளன - மொத்த சந்திர கிரகணம், பகுதி சந்திர கிரகணம் மற்றும் பெனும்பிரல் சந்திர கிரகணம். இது ஜூன் 5 அன்று ஒரு பெனும்பிரல் சந்திர கிரகணம் ஆகும், இதில் பூமியின் முக்கிய நிழல் சந்திரனை மறைக்காது. இதனால், கிரகணம் இந்தியாவில் முழுமையாகக் காணப்படும். 

கிரகணங்களுடன் தொடர்புடைய பல கட்டுக்கதைகள் உள்ளன. இந்தியாவில், கிரகணம் காலத்தில் எந்த ஒரு நல்ல நிகழ்வும் அல்லது வேலையும் எடுக்கப்படக்கூடாது என்று நம்பப்படுகிறது. உணவை சமைப்பது அல்லது சாப்பிடுவது கூட தவிர்க்கப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது.

READ | இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் தொடங்கியது; வெறும் கண்களால் பார்க்கலாம்

 

2020 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் ஜனவரி 10 அன்று காணப்பட்டது. ஜூன் 5 இரண்டாவது முறையாகும், மேலும் ஜூலை மற்றும் நவம்பர் மாதங்களில் மேலும் இரண்டு கிரகணம் நிகழும். 

இந்தியாவில் கிரகண நேரங்கள்:

 

பெனும்பிரல் கிரகணம் 5 ஜூன், 23:15:51 (இரவு 11.15) தொடங்குகிறது.
அதிகபட்ச கிரகணம்: 6 ஜூன், 00:54:55 (காலை 12.54)
பெனும்பிரல் கிரகணம் 6 ஜூன், 02:34:03 (காலை 02.34) முடிவடைகிறது. 

இந்த சந்திர கிரகணம் ஸ்ட்ராபெரி மூன் எக்லிப்ஸ்(Strawberry Moon Eclipse) என அழைக்கப்படுகிறது.

இந்த சந்திர கிரகணத்தினால் எந்த ராசி, நட்சத்திரத்தினுக்குப் பாதிப்பு ஏற்படும்:

 

கேட்டை நட்சத்திரமும், அதன் முன் மற்றும் பின் உள்ள அனுஷம், மூலம் நட்சத்திரத்தினர் பரிகாரம் செய்து கொள்வது அவசியம். அதோடு கேட்டை நட்சத்திரம் புதன் பகவானின் ஆதிக்கத்தைப் பெற்ற நட்சத்திரம் என்பதால் புதன் பகவான் ஆட்சி செய்யக் கூடிய நட்சத்திரங்களான ரேவதி, ஆயில்யம் நட்சத்திரம் ஆகிய நட்சத்திரத்தினர் பரிகாரம் செய்வது அவசியம்.

பாதிக்கப்படும் நட்சத்திரங்கள்:

 

அனுஷம் நட்சத்திரம் - விருச்சிகம் ராசி
கேட்டை நட்சத்திரம் - விருச்சிகம் ராசி
மூலம் நட்சத்திரம் - தனுசு ராசி
ரேவதி நட்சத்திரம் - மீனம் ராசி
ஆயில்யம் நட்சத்திரம் - கடக ராசி

 

Trending News