உலகின் முதல் 108MP பென்டா கேமரா தொலைபேசியை சியோமி அறிமுகப்படுத்த உள்ளது.

சியோமி (Xiaomi) நிறுவனம் நவம்பர் 14 ஆம் தேதி எம்ஐ நோட் 10-ஐ (Mi Note 10) அறிமுகப்படுத்த உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 31, 2019, 04:03 PM IST
உலகின் முதல் 108MP பென்டா கேமரா தொலைபேசியை சியோமி அறிமுகப்படுத்த உள்ளது. title=

புதுடெல்லி: ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்யும் சீன நிறுவனமான சியோமி (Xiaomi), சமீபத்தில் ரெட்மி நோட் 8 போனை (Redmi Note 8) அறிமுகப்படுத்தியது. இப்போது, அந்த நிறுவனம் எம் ஐ நோட் 10-ஐ (Mi Note 10) அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த தொலைபேசியின் சார்பு பதிப்பு சமீபத்தில் தாய்லாந்தில் மேற்கொள்ளப்பட்டது. இப்போது இந்த ஸ்மார்ட்போன்கலை சீனாவுக்கு வெளியே உள்ள சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொலைபேசியின் முதல் டீஸரை சியோமி அறிமுகப்படுத்தி உள்ளது.

சியோமி நிறுவனம் தொலைபேசியின் டீஸர் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் வெளியிட்டுள்ளது. இந்த டீஸரிலிருந்து நிறுவனம் எம்ஐ நோட் 10 ஐ அறிமுகப்படுத்தப் போகிறது என்பது தெளிவாகிறது. உலகின் முதல் 108 எம்.பி (108MP) பென்டா கேமரா அமைப்பு தொலைபேசியில் வழங்கப்படும் என்பதையும் இந்த டீசரில் காட்டப்பட்டு உள்ளது.

ஷியோமியின் எம்ஐ சிசி 9 (Mi CC9) ஸ்மார்ட்போனிலும் பென்டா கேமரா அமைப்பு வழங்கப்படும் என்பது சமீபத்தில் செய்திகள் வெளியாகின.

இரண்டு தொலைபேசிகளின் அம்சங்களையும் பார்க்கும்போது, எம்ஐ நோட் 10-ஐ (Mi Note 10) மற்றும் எம்ஐ சிசி 9 (Mi CC9)  ஸ்மார்ட்போன்களை சர்வதேச மாடலாக இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. அதேவேளையில், இரண்டு தொலைபேசிகளிலும் செயலிகளின் செயல்பாடு வேறுவேறு ஆக இருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

எம்ஐ சிசி 9 ப்ரோவில் உள்ள 108 மெகாபிக்சல் கேமரா தவிர, 13 மெகாபிக்சல் அகல-கோண லென்ஸ் மற்றும் 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். சியோமி மி சிசி 9 ப்ரோ ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730 ஜி செயலி மூலம் இயக்கப்படும் என்று ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே செயலி ஒப்போ ரெனோ 2 (Oppo Reno 2) இல் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News