Nokia T20 tablet: கம்மி விலைக்கு NOKIA Tablet விரைவில் அறிமுகம்

பட்ஜெட் விலையில் NOKIA Tablet கூடிய விரைவில் அறிமுகம் செய்யும் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 30, 2021, 08:26 AM IST
Nokia T20 tablet: கம்மி விலைக்கு NOKIA Tablet விரைவில் அறிமுகம் title=

Nokia T20 tablet: நோக்கியா தனது போர்ட்ஃபோலியோவின் கீழ் டேப்லெட்களையும் சேர்க்க உள்ளது. நோக்கியா நிறுவனத்தின் முதல் டேப்லெட் ஆனது விரைவில் சந்தையில் வரவிருக்கிறது. 

நோக்கியா (Nokia) மொப்பில் வெளியான அறிக்கையின்படி, நோக்கியா டி20 (Nokia T20) என்று பெயரிடப்படும் மற்றும் அடுத்த நிகழ்வில் நோக்கியா டேப்லெட் உடன் சேர்ந்து பல வகையான நோக்கியா ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யப்படும். ரஷ்யாவில் வெளிப்படையாகப் பெறப்பட்ட ஒரு சாதன சான்றிதழின் வழியாக நோக்கியா டி 20 டேப்லெட் பற்றிய இந்த முக்கிய தகவல் கசிந்துள்ளது. 

ALSO READ | Good News: 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்டைலாக திரும்பி வந்துள்ளது Nokia 6310!!

நோக்கியா டி 20 டேப்லெட்டைப் பற்றியா முழு விவரங்கள் இதுவரை அறியப்படவில்லை, இருந்தாலும் இதுவரை கிடைத்த தகவல்களின்படி இதில் 10.36 இன்ச் டிஸ்ப்ளே இடம்பெறக்கூடும் என்று கூறப்படுகிறது. மேலும் நோக்கியா டி 20 டேப்லெட்டில் மிகவும் பெரிய டிஸ்பிளே இருக்கூடும். 

மேலும் இது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. நோக்கியா டி 20 டேப்லெட் ஆனது வைஃபை மற்றும் எல்டிஇ வகைகளில் மட்டுமே வழங்கப்படும். அத்துடன் நோக்கியா டி 20 எல்டிஇ மாறுபாடு ஆனது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.21,000 க்கும், அதே நேரத்தில் வைஃபை ஒன்லி மாறுபாடு ஆனது தோராயமாக ரூ.19,000 க்கும் அறிமுகம் செய்யப்படலாம். இந்த டேப்லெட்டை ஆண்டின் இறுதியில் அதாவது செப்டம்பர் அல்லது அக்டோபரில் வெளியிட வாய்ப்புகள் உள்ளது.

ALSO READ | Nokia C20 Plus: வெறும் ரூ.8000-ல் அறிமுகம் ஆனது அட்டகாச ஸ்மார்ட்போன்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News