Samsung அளித்த நல்ல செய்தி: அட்டகாசமான 5G ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம்

சாம்சங் தனது புதிய 5G ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 1, 2022, 02:37 PM IST
  • சாம்சங் பல தசாப்தங்களாக ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருகிறது.
  • உலகம் முழுவதும் நம்பகமான நிறுவனமாக சாம்சங் அறியப்படுகிறது.
  • சாம்சங் தனது புதிய 5G ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யும்.
Samsung அளித்த நல்ல செய்தி:  அட்டகாசமான 5G ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம்  title=

சாம்சங் பல தசாப்தங்களாக ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருகிறது. உலகம் முழுவதும் நம்பகமான நிறுவனமாக சாம்சங் அறியப்படுகிறது. 

செய்திகளின்படி, சாம்சங் (Samsung) தனது புதிய 5G ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இது குறித்து கசிந்த தகவல்களின் படி, நிறுவனம் பிப்ரவரி மாதத்தில் Samsung Galaxy A33 5G மற்றும் Samsung Galaxy A13 5G ஐ அறிமுகப்படுத்தக்கூடும். அவற்றைப் பற்றிய அனைத்து தகவல்களையும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சாம்சங்கின் 5ஜி ஸ்மார்ட்போன்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகம்

91மொபைல்ஸின் ஒரு அறிக்கையில், நன்கு அறியப்பட்ட டிப்ஸ்டர், முகுல் ஷர்மா, இந்த ஆண்டு பிப்ரவரி 2022 இல், சாம்சங் அதன் இரண்டு 5ஜி ஸ்மார்ட்போன்களான சாம்சங் கேலக்ஸி ஏ33 5ஜி மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி ஆகியவற்றை அறிமுகப்படுத்தக்கூடும் என்று கூறுகிறார். முகுல் ஷர்மாவின் கூற்றுப்படி, Samsung Galaxy A33 5G இன் விலை மிக அதிகமாக இருக்காது. எனினும் Samsung Galaxy A13 5G விலை பற்றி முக்கிய குறிப்புகள் எதையும் அவர் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ | Flipkart TV Days: தள்ளுபடியில் பெறுங்கள் 55 இன்ச் Smart TV 

Samsung Galaxy A33 5G இன் அற்புதமான அம்சங்கள்

Samsung Galaxy A33 5G இன் அம்சங்கள் தற்போது நிறுவனத்தால் வெளியிடப்படவில்லை. எனினும், இது குறித்து வந்துள்ள செய்திகளின்படி, இந்த ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் முழு HD + AMOLED டிஸ்ப்ளேவுடன் வெளியிடப்படலாம். இந்த ஸ்மார்ட்போன் IP67 மதிப்பீட்டில் வெளிவரலாம். 

அதாவது இந்த போன், தண்ணீர் மற்றும் தூசியால் பாதிப்புக்குள்ளாகாது. இந்த ஸ்மார்ட்போன் (Smartphone) குவாட் கேமரா அமைப்புடன் வரக்கூடும் என்றும், 13எம்பி செல்ஃபி கேமராவையும் கொண்டிருக்கக்கூடும் என்றும் இந்த போனின் ரெண்டர்கள் நம்புகின்றன. இந்த ஸ்மார்ட்போன் 3.55மிமீ ஹெட்போன் ஜாக் உடனும் வெளிவரக்கூடும். 

Samsung A13 5G இன் சிறந்த அம்சங்கள்

மீடியாடெக் டைமென்ஷன் 700 சிப்செட்டில் வேலை செய்யும் இந்த ஸ்மார்ட்போனில், 4GB RAM உடன் 64GB ஸ்டோரேஜைப் பெறலாம். 6.5-இன்ச் இன்ஃபினிட்டி-வி HD+ டிஸ்ப்ளே, 90Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 720 x 1,600 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட இந்த ஃபோன் 5,000mAh பேட்டரி மற்றும் 15W சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. 

ஆண்ட்ராய்டு 11ல் இயங்கும் இந்த போனில், 50எம்பி ப்ரைமரி சென்சார் மற்றும் 5எம்பி செல்ஃபி கேமராவுடன் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பும் கிடைக்கிறது. 

ALSO READ | Hide Instagram: இன்ஸ்டாகிராம் பதிவுகளை மறைக்க சுலப வழிகள்! பதிவை அழிக்க வேண்டாம்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News