புதுடெல்லி: WhatsApp Pay இப்போது இந்திய பயனர்களுக்காக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, எச்.டி.எஃப்.சி வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவற்றுடன் live ஆகியுள்ளதாக, அதாவது செயலாக்கத்தைத் துவக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
WhatsApp Pay தனது UPI பயனர் தளத்தை சீரான வேகத்தில் விரிவாக்க முடியும் என செய்தி நிறுவனமான IANS கூறியுள்ளது. அதிகபட்ச அளவாக 20 மில்லியன் பதிவு செய்யப்பட்ட பயனர்கள் என்ற அளவுடன் இது தொடங்கலாம். "UPI ஒரு உருமாறும் சேவையாகும். இதற்கு முன்னர் இந்த வசதிகளை பயன்படுத்த முடியாமல் இருந்த அதிக அளவிலான பயனர்களுக்கு, எங்கள் டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் நிதி சேர்க்கை ஆகியவற்றின் நன்மைகளை வழங்குவதற்கான வாய்ப்பை நாங்கள் கூட்டாகக் கொண்டுள்ளோம்" என்று இந்தியாவின் WhatsApp நிறுவனத் தலைவர் அபிஜித் போஸ் கூறினார்.
நவம்பர் 6 ஆம் தேதி, இந்தியா முழுவதும் உள்ளவர்கள் WhatsApp மூலம் இனி பணம் அனுப்ப முடியும் என்று WhatsApp அறிவித்திருந்தது.
"இந்த பாதுகாப்பான கட்டண முறை ஒரு செய்தியை அனுப்புவது போலவே பணத்தை அனுப்புவதையும் எளிதாக்குகிறது. மக்கள் தங்கள் குடும்ப உறுப்பினருக்கு பாதுகாப்பாக பணத்தை அனுப்பலாம். நேரில் பணத்தை பரிமாறிக் கொள்ளாமலோ அல்லது உள்ளூர் வங்கிக்குச் செல்லாமலோ சேர்ந்து வாங்கும் பொருட்களின் விலையை தூரத்திலிருந்து பகிர்ந்து கொள்ளலாம்," என்று WhatsApp கூறியது.
இந்திய கட்டண கார்ப்பரேஷன் (NPCI) உடன் இணைந்து பணம் செலுத்தும் அம்சத்தை WhatsApp வடிவமைத்துள்ளது.
160 க்கும் மேற்பட்ட ஆதரவு வங்கிகளுடன் பரிவர்த்தனைகளை ஏதுவாக்கும் இந்தியாவின் முதல், நிகழ்நேர கட்டண முறையான யுனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸை (UPI) பயன்படுத்தி WhatsApp இந்த அம்சத்தை வடிவமைத்துள்ளது.
"டிஜிட்டல் கட்டணங்களின் எளிமை மற்றும் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான இந்தியாவின் பிரச்சாரத்தில் சேர உற்சாகமாக உள்ளோம். இது இந்தியாவில் நிதி சேர்க்கையை விரிவுபடுத்த உதவுகிறது" என்று WhatsApp மேலும் கூறியது.
உங்கள் வங்கிக் கணக்கை WhatsApp-ல் சேர்த்த பிறகு, அண்ட்ராய்டு மற்றும் ஐபோன் இரண்டிற்கும் நீங்கள் பணம் அனுப்பலாம்.
அண்ட்ராய்டு வழியாக WhatsApp Money-ஐ அனுப்புவது எப்படி
-நீங்கள் பணம் அனுப்ப விரும்பும் நபருடனான chat box-ஐத் திறக்கவும்.
-இப்போது ‘attach’-ஐ டேப் செய்து, ‘Payment’-ஐத் தேர்ந்தெடுக்கவும்.
-உங்கள் டெபிட் கார்டு தகவலைச் சரிபார்க்க ‘Continue’ என்பதை டேப் செய்யவும்.
-உங்கள் டெபிட் கார்டு எண்ணின் கடைசி 6 இலக்கங்களை உள்ளிடவும்.
-காலாவதி தேதியை வழங்கி, ‘Done’ ஐ டேப் செய்யவும்.
-இப்போது UPI PIN ஐ செட் அப் செய்யவும்.
-உங்களுக்கு ஒரு OTP (ஒன் டைம் கடவுச்சொல்) கிடைக்கும்.
-இல்லையென்றால், தொலைபேசியில் OTP அடங்கிய எஸ்எம்எஸ் கிடைக்கும்.
-‘ENTER OTP’ இன் கீழ் OTP ஐ டைப் செய்யவும்.
-உங்கள் தொலைபேசியில் மற்றொரு OTP ஐ அனுப்ப, ‘Resend OTP’ ஐ டேப் செய்யவும்.
-ஒரு UPI (ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம்) PIN-ஐ (தனிப்பட்ட அடையாள எண்) உருவாக்கவும்.
-இப்போது அதை ‘SETUP UPI PIN’ இன் கீழ் உள்ளிட்டு ‘Submit’-ஐத் தட்டவும்.
-UPI செட் அப் முடிந்ததும், ‘Done’ என்பதை டேப் செய்யவும்.
-நீங்கள் பணம் அனுப்ப விரும்பும் நபருடனான சேட் பாக்ஸைத் திறக்கவும்.
-‘Attach’-ஐ டேப் செய்து பின்னர் ‘Payment’-ஐ டேப் செய்யவும்.
-நீங்கள் அனுப்ப விரும்பும் தொகையை உள்ளிடவும்.
-கட்டணம் செலுத்துவதற்கான விளக்கத்தை உள்ளிட்டு ‘Send’-ஐ டேப் செய்யவும்.
ALSO READ: Whatsapp மூலம் மிக எளிதாக பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா? இதைச் செய்தால் போதும்
iPhone வழியாக WhatsApp Money-ஐ அனுப்புவது எப்படி
-நீங்கள் பணம் அனுப்ப விரும்பும் நபருடனான சேட் பாக்ஸைத் திறக்கவும்.
-Attach> Payment-ஐ டேப் செய்யவும்.
-உங்கள் டெபிட் கார்டு தகவலைச் சரிபார்க்க ‘Continue’ என்பதை டேப் செய்யவும்.
-உங்கள் டெபிட் கார்டு எண்ணின் கடைசி 6 இலக்கங்கள் மற்றும் காலாவதி தேதியை உள்ளிடவும்.
-Next>Set Up UPI PIN-ஐ டேப் செய்யவும்.
-உங்கள் தொலைபேசியில் OTP (ஒன் டைம் கடவுச்சொல்) கொண்ட எஸ்எம்எஸ் அனுப்பப்படும்.
-ENTER OTP இன் கீழ் OTP ஐ டைப் செய்யவும்.
-உங்கள் தொலைபேசியில் மற்றொரு OTP ஐப் பெற, ‘Resend OTP’-ஐ டேப் செய்யவும்.
- ஒரு UPI (ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம்) PIN-ஐ (தனிப்பட்ட அடையாள எண்) உருவாக்கி அதை ‘ENTER NEW UPI PIN’ இன் கீழ் உள்ளிட்டு ‘Submit’-ஐத் தட்டவும்.
-‘CONFIRM NEW UPI PIN’ இன் கீழ் புதிய UPI PIN ஐ மீண்டும் உள்ளிட்டு ‘Submit’-ஐ டேப் செய்யவும்.
-UPI செட் அப் முடிந்ததும், ‘Done’ என்பதை டேப் செய்யவும்.
-நீங்கள் பணம் அனுப்ப விரும்பும் நபருடனான சேட் பாக்ஸைத் திறக்கவும்.
-‘Attach’-ஐ டேப் செய்து பின்னர் ‘Payment’-ஐ டேப் செய்யவும்.
-நீங்கள் அனுப்ப விரும்பும் தொகையை உள்ளிடவும்.
-கட்டணம் செலுத்துவதற்கான விளக்கத்தை உள்ளிட்டு ‘Send’-ஐ டேப் செய்யவும்.
இந்தியாவில் WhataApp-ல் பணம் அனுப்ப முன்நிபந்தனை என்ன?
இந்தியாவில் (India) WhatsApp-ல் பணம் அனுப்ப, இந்தியாவில் வங்கி கணக்கு மற்றும் டெபிட் கார்டு வைத்திருப்பது அவசியமாகும். Whatsapp வங்கிகளுக்கு அறிவுறுத்தல்களை அனுப்புகிறது. கட்டண சேவை வழங்குநர்களான வங்கிகள், பணம் செலுத்துபவர் மற்றும் பெறுபவரின் வங்கி கணக்குகளுக்கு இடையில் UPI வழியாக பணத்தை மாற்றத் தொடங்குகிறது.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR