பிஎம்டபிள்யூ நிறுவனம், தனது 917,000 பழைய கார்கள் மற்றும் SUV களை திரும்பப் பெறுகிறது, அவற்றில் பெரும்பாலானவை மூன்றாவது முறையாக திரும்பப் பெறப்படுகின்றன.
BMW 3 சீரிஸ், 5 சீரிஸ், 1 சீரிஸ், X5, X3 மற்றும் Z4 வாகனங்கள் 2006 முதல் 2013 வரையிலான வருடங்களில் தயாரிக்கப்பட்ட மாடல் கார்கள், திரும்பப் பெறும் பட்டியலில் இணைநதுள்ளன.
என்ஜினில் தீயை ஏற்படுத்தக்கூடிய ஒரு தவறின் காரணமாக இந்த முறை வாகனங்கள் திரும்பப்பெறப்படுகின்றன.
அமெரிக்க தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகத்தால் நேற்றறு (2022, மார்ச் 9, புதன்கிழமை) வெளியிடப்பட்ட ஆவணங்களின்படி, நேர்மறை கிரான்கேஸ் காற்றோட்டம் வால்வு ஹீட்டரில் மின் பற்றாக்குறை காரணமாக இந்த வாகனங்கள் திரும்பப் பெறபப்டுகின்றன.
அவை அதிக வெப்பம் மற்றும் தீப்பிடிக்கும் திறன் கொண்டவை. வாகனங்கள் ஓட்டும்போது அல்லது ஓட்டிய பிறகு நிறுத்தப்பட்ட சிறிது நேரத்தில் தீப்பிடிக்கும் அபாயம் உள்ளது.
தீ ஏற்படுவது அரிதாக இருப்பதால், வாகனங்களை இன்னும் பல காலம் பயன்படுத்த முடியும் என்று BMW கூறுகிறது.
இருப்பினும், வணிக அறிவுறுத்தல்களின்படி, ஓட்டுநர் புகை நாற்றம் அல்லது என்ஜின் பெட்டியிலிருந்து புகை வருவதைக் கண்டால், அவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு காரை கொண்டு சென்ற பிறகு, எஞ்சினை அணைத்துவிட்டு காரை விட்டு வெளியேற வேண்டும்.
இந்த சிக்கல் தொடர்பாக தீர்வு காணும் முயற்சியில் ஜெர்மன் வாகன உற்பத்தி நிறுவனமான பிஎம்டபிள்யூ ஈடுபட்டுள்ளது.
மேலும் படிக்க | BMW, டெஸ்லாவை ஓரங்கட்டிய டொயோட்டா..
தற்போது கார் உற்பத்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, திரும்பப் பெறும் மாடல் கார்களின் உரிமையாளர்களுக்கு ஏப்ரல் 25 முதல் கடிதம் மூலம் தகவல்க் தெரிவிக்கப்படும்.
இதே பிரச்சினை காரணமாக 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பெரும்பாலான வாகனங்கள் திரும்ப அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
BMW ஆவணங்களின்படி, முன்பு தங்கள் வாகனங்களை பழுதுபார்த்த உரிமையாளர்கள் அவற்றை மீண்டும் சரிசெய்ய வேண்டும்.
மேலும் படிக்க | நொடியில் நிறம் மாறும் கார்கள்’ - BMW-வின் புதிய தொழில்நுட்பம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR