சீன மொபைல் தயாரிப்பு நிறுவனமான Xiaomi, தனது Redmi Y-series படைப்புகள் வெளியீட்டு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது!
Xiaomi நிறுவனத்தில் புதிய வரவான Redmi Y3 ஸ்மார்போனினை வரும் ஏப்ரல் 24-ஆம் நாள் இந்தியாவில் வெளியிட அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் Xiaomi தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது...
Y should selfies be less detailed? Y can’t we change the way we look at them?
Y wait? The #32MPSuperSelfie is coming your way soon. Revealing on 24-04-2019.
RT and guess what’s coming with #32MPSuperSelfie. pic.twitter.com/KbZqMg8vuV
— Redmi India (@RedmiIndia) April 15, 2019
Xiaomi வெளியிட்டுள்ள குறிப்புகளின் படி இந்தியாவில் வெளியாகவுள்ள Redmi Y3 ஆனது 32MP முன் கேமிரா அம்சம் கொண்டதாக இருக்கும் எனவும், சர்வதேச நேரப்படி 12.00 PM வெளியிடப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த 32 மெகா பிக்சல் முன் கேமிரா மூலம் வியக்கத்தகு செல்பி புகைப்படங்களை எடுக்கலாம் எனவும் Redmi தெரிவித்துள்ளது.
---Redmi Y3 குறித்த சில முக்கிய தகவல்கள்---
- Redmi Note 7-ல் இருப்பது போல் இரண்டு பின் கேமிராக்கள் (12MP + 2MP)
- Snapdragon 632 SoC
- Android 9 Pie இயங்குதளம்.
- முந்தைய அறிவிப்பின் படி Redmi Y3 ஆனது அதிகளவு பேட்டரியுடன் வெளியாகும் என குறிப்படப்பட்டது, எனவே இந்த மொபைல் ஆனது 4,000mAh பேட்டரி திறனுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.