குர்மீத் ராம் ரஹீம் சிங் மீதான பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி என சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
குர்மீத் ராம் ரஹீம் சிங் மீதான பாலியல் பலாத்கார வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது. இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
தேரா சச்சா சவுதா என்ற ஆன்மிக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங் மீது பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று வழங்கப்பட உள்ளது.
இந்திய மகளிர் உலக கோப்பை பைனலில் தோல்வி ஆனாலும் ரசிகர்களின் கவனத்தை இவர்கள் ஈர்த்துள்ளனர். ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி பைனலுக்கு தேர்வானார்கள். ஜோக்ஸ் - 3
இதில் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியதில் முக்கியப் பங்காற்றியவர் ஹர்மன்ப்ரீத் கவுர். ஆஸ்திரேலிய அணிகளுடன் மோதிய இந்திய அணி ஹர்மன்ப்ரீத் கவுர் 115 பந்துகளில் 171 ரன்கள் குவித்து அதிரவைத்தார். மேலும், இங்கிலாந்து அணிக்கு எதிரான பைனலி போட்டியிலும் அவர் அரை சதம் அடித்து அசத்தினார்.
பதன்கோட் விமானப்படை தளம் அருகே மர்ம பை ஒன்று கண்டெடுக்கப்பட்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளம் அருகே மர்ம பை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இந்த பையில் 3 ராணுவ உடைகள் இருந்தது தெரிய வந்துள்ளது. இதனால் அந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மர்மபை குறித்து விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
பதன்கோட் விமானப்படை தளத்தை சுற்றிலும் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள ஒதியன் கிராமத்தில் பலத்த காற்று வீசியதால் உயரழுத்த மின்சார வயர் அறுந்து விழுந்து தீப்பற்றி எரிந்தது. தீ சுமார் 300 ஏக்கர் பயிர்களை நாசமாக்கியது.
பஞ்சாப் மாநில மந்திரியாக உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து ஒதியான் பகுதிக்கு சென்றார். அங்கு மின்சார கசிவு காரணமாக விளைந்த பயிர்களை இழந்த விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது தீயில் பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு ரூ. 24 லட்சம் நிதிஉதவி வழங்குவதாக அறிவித்தார். பஞ்சாப் மாநில அரசு ஏக்கருக்கு 8 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள குர்தாஸ்பூர் சரகம், பஹாரிப்பூர் பகுதியில் இந்தியா பாகிஸ்தான் எல்லைக்கோட்டுப் பகுதி உள்ளது. இங்குள்ள கண்காணிப்பு முகாமில் இந்தியா எல்லை பாதுகாப்பு படையினர் நேற்று பின்னிரவு வழக்கம்போல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இன்று அதிகாலை பாகிஸ்தான் எல்லைக்கோட்டின் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற மர்ம நபரை துப்பாக்கியால் சுட்டபடி, திரும்பிப் போகுமாறு பாதுகாப்பு படையினர் எச்சரித்தனர். இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் முன்னேறி வந்த அந்த மர்ம நபரை இன்று காலை 6 மணியளவில் நமது வீரர்கள் துப்பாக்கிகளால் சுட்டுக் கொன்றனர்.
பஞ்சாப் முதல்-மந்திரியாக அமரிந்தர் சிங் இன்று பதவியேற்றார்.
சண்டிகாரில் உள்ள கவர்னர் மாளிகையில் இன்று காலை பஞ்சாப்பின் 26-வது முதல்வராக அம்ரிந்தர் சிங் பதவி ஏற்றார். அவருக்கு கவர்னர் வி.பி.சிங் பத்னோரே பதவிப்பிரமாணமும், ரகசியக்காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.
பஞ்சாப் முதல்-மந்திரியாக அமரிந்தர் சிங் பதவி ஏற்பது இது 2-வது முறையாகும். ஏற்கனவே அவர் 2002-2007 காலகட்டத்தில் அங்கு முதல்-மந்திரி பதவி வகித்தார்.
பஞ்சாப் முதல்-மந்திரியாக அமரிந்தர் சிங் இன்று பதவி ஏற்கிறார்.
பஞ்சாப் முதல்-மந்திரியாக அமரிந்தர் சிங் பதவி ஏற்பது இது 2-வது முறை. ஏற்கனவே அவர் 2002-2007 காலகட்டத்தில் அங்கு முதல்-மந்திரி பதவி வகித்தார்.
சண்டிகாரில் உள்ள கவர்னர் மாளிகையில் இன்று காலை அம்ரிந்தர் சிங் பதவி ஏற்கிறார். பஞ்சாப்பின் 26-வது முதல்வராக அவர் பதவியேற்க உள்ளார். அவருக்கு கவர்னர் வி.பி.சிங் பத்னோரே பதவிப்பிரமாணமும், ரகசியக்காப்பு பிரமாணமும் செய்துவைக்கிறார்.
உ.பி. உட்பட ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தலுக்கு பிந்தையக் கருத்து கணிப்பு வெளியானது. இந்த கருத்து கணிப்பில் பாரதிய ஜனதாவிற்கு வெற்றி முகம் தெரிகிறது. பஞ்சாபில் முதன் முறையாகப் போட்டியிட்ட ஆம் ஆத்மி மற்றும் அதன் எதிர்கட்சியான காங்கிரஸுக்கும் இடையில் இழுபறி நிலை வெளியாகி உள்ளது.
உத்தரப் பிரதேசம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் அறிவிக்கப் பட்டது. இதில் 6 கட்ட தேர்தல் முடிந்து விட்டது. 7-வது மற்றும் இறுதிகட்டமாக 40 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு நடை பெறுகிறது. இதற்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிந்தது.
மணிப்பூரில் மொத்தம் உள்ள 60-ல் 38 தொகுதிகளில் முதல்கட்டமாக கடந்த 4-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. 2-வது மற்றும் இறுதிகட்டமாக மீதமுள்ள 22 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது.
பஞ்சாப், கோவாவில் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
#PunjabPolls2017: ஹர்பஜன் சிங் தனது தாயாருடன் வந்து ஓட்டு போட்டார். அவர் கூறுகையில் " முதலில் பஞ்சாபில் இரண்டு கட்சிகள் இருந்தது. தற்போது தேர்தலில் மூன்று கட்சிகள் போட்டி இடுகின்றன. ஆனால் இந்த தேர்தலில் எந்த கட்சி வென்றி பெற்றாலும் அந்த பஞ்சாப் முன்னேற்றத்துக்காக பாடுபட வேண்டும் என கூறினார்.
பஞ்சாப், கோவாவில் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
பஞ்சாப்:-
117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் சிரோமணி அகாலிதளம், பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சி நடக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளாக தொடர்ந்து இக்கூட்டணியே ஆட்சி செய்து வருகிறது. மேலும் களத்தில் காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி கட்சிகளும் உள்ளன.
பஞ்சாப், கோவா மாநிலங்களில் பிரசாரம் ஓய்ந்த நிலையில், நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
பஞ்சாப்:-
117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் சிரோமணி அகாலிதளம், பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சி நடக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளாக தொடர்ந்து இக்கூட்டணியே ஆட்சி செய்து வருகிறது. மேலும் களத்தில் காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி கட்சிகளும் உள்ளன.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.