செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழன் என்று அன்போடு அழைக்கப்படும் திரு. வ.உ.சிதம்பரம் அவர்களின் 146_வது பிறந்த நாளான இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் தமிழக அமைச்சர்களும் இருந்தார்கள்.
இதைக்குறித்து முதல்வர் கூறுகையில், இந்நாளில் திரு. வ.உ.சி அவரை நினைவு கூறுவதில் பெருமை அடைகிறேன் எனக் கூறினார்.
முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர் திரு. வ.உ.சிதம்பரம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 1872-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி பிறந்தார். 1936-ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி தனது 64 வயதில் இறைவனடி சேர்ந்தார்.
இன்று இந்திய அணியின் முன்னால் கேப்டன் எம் எஸ் தோனியின் பிறந்த நாள்.
இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவர் ‘தல மகேந்திர சிங் தோனி’ பிறந்த நாள் இன்று. அவரை வாழ்த்துவோம்.
அவரை பற்றி சில...
இன்று இந்திய அணியின் முன்னால் கேப்டன் எம் எஸ் தோனியின் பிறந்த நாள். அவருக்கு வயது 36.
இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவர் ‘தல மகேந்திர சிங் தோனி’ பிறந்த நாள் இன்று. அவரை வாழ்த்துவோம்.
அவரை பற்றி சில...
1) 1981-ம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகரமான ராஞ்சியில் இவர் பிறந்தார்.
ரஜினிகாந்த் பிறந்த நாளில் புதிய கட்சி அறிவிப்பு வெளிவரும் என்று ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்தபோது, “சூழ்நிலை ஏற்பட்டால் அரசியலுக்கு வருவேன். போருக்கு தயாராக இருங்கள்” என்று சூசகமாக அறிவித்ததில் இருந்து தமிழக அரசியல் கட்சிகள் பரபரப்பாகி எதிர்ப்பு, ஆதரவு குரல்கள் எழுப்பி வருகின்றன.
கிரிக்கெட் உலகின் தலைசிறந்த வீரரும் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரருமான சச்சின் தெண்டுல்கர் இன்று தனது 44-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
தெண்டுல்கரின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன. சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் மட்டும் அல்லாது பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் கடந்த 5-ம் தேதி காலமானார். அதேபோல 7-ம் தேதி மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமி அவர்கள் அதிகாலை சென்னையில் காலமானார். இருவருக்குமே அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் வருகிற 12 ந்தேதி நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாள் வருகிறது. தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் போஸ்டர்கள், பேனர்கள் வைப்பார்கள். மேலும் அன்னதானம், ரத்ததானம் என நல்ல காரியங்களாக செய்வார்கள்.
இன்று பல பரிமாணம் கொண்ட சாதனை நாயகன் கமல்ஹாசன் பிறந்த நாள்
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், பாடலாசிரியர், பாடகர், நடன அமைப்பாளர் என பன்முகப் பரிமாணம் கொண்ட சாதனை நாயகன் கமல்ஹாசன் . 50 வருடங்களுக்கு மேல் தமிழ் சினிமாவிற்கு தொண்டாற்றிய இந்த மகா கலைஞனை பற்றி பார்போம்
1954- ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பிறந்தவர். தந்தை வழக்கறிஞர். சென்னை சாந்தோம் பள்ளிகளில் படித்தார்.
1960-ல் களத்தூர் கண்ணம்மா திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
1931 ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ராமேஸ்வரத்தில் பிறந்தார் இவரது இயற் பெயர் ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம். இவர் இந்தியாவின் 11-வது குடியரசு தலைவராகவும் மற்றும் விண்வெளி பொறியாளராகவும் பணியாற்றினார். அவரது பிறந்த தினமான இன்று இளைஞர்களின் எழுச்சி தினமாக கொண்டாடப்படுகிறது.
டாக்டர் ஏபிஜே அப்துல்கலாமின் 85 வது பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒவ்வொரு இந்தியனின் சிந்தனையையும் கவர்ந்தவர் என்று பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.