சென்னை ஆர்கேநகர் இடைத் தேர்தலின் போது முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மூலம் தினகரன் தரப்பு பேரம் பேசியதாக வழக்கு போடப்பட்டது.
இதற்காக சுகேஷிடம் ரூ. 1.5 கோடி முன்பணம் தரப்பட்டதாகவும் சுகேஷை டெல்லி லாட்ஜில் கைது செய்த போலீசார் தெரிவித்தனர். சுகேஷ் அளித்த தகவலின் அடிப்படையில் இந்த வழக்கில் தினகனும் சேர்க்கப்பட்டார்.
நடிகர் சந்தானத்துக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!
கட்டிட ஒப்பந்ததாரர் மற்றும் நடிகர் சந்தானம் ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பும வழக்கில் நடிகர் சந்தானத்துக்கு சில நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கட்டிடம் கட்டும் ஒப்பந்ததாரர் மற்றும் நடிகர் சந்தானம் இருவரும் தாக்கிக் கொண்டதால், போலீசார் இருவரும் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் சந்தானம் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
குஜராத்தின் கோத்ரா ரயில் நிலையத்தில் ரயில் எரிப்பு சம்பவத்தில் 59 பேர் கொல்லப்பட்ட மேல்முறையீட்டு ஐகோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது.
இந்த சிறப்பு நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட 11 பேருக்கு, தண்டனை குறைப்பு செய்துள்ள ஐகோர்ட், அவர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியுள்ளது.
கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அயோத்தியில் இருந்து வந்த சபர்மதி விரைவு ரயிலின் எஸ்.6 பெட்டி மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த விபத்தில் 59 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். இந்த ரயில் எரிப்பு சம்பவத்தால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கலவரமாகி வெடித்தது.
அவதூறான தகவலை வெளியிட்ட வலைத்தளத்தின் மீது 100 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா முடிவு செய்துள்ளார்.
பாஜக கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா மகன் ஜெய் ஷா. இவர் நடத்தி வரும் நிறுவனம் டெம்பிள் எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட்.
இந்த நிறுவனத்தின் லாபம் கடந்த 2015-16-ம் நிதி ஆண்டில் 80 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளதாக ஒரு தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தி ஆஷ்ரம் பள்ளிக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற, கட்டட உரிமையாளருக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கிண்டியில் லதா ரஜினிகாந்துக்கு சொந்தமான ஆஷ்ரம் பள்ளிக்கூடம் இயங்கி வந்தது. வாடகை தரவில்லை என்று கூறிகட்டடத்தின் உரிமையாளர் பள்ளியைப் பூட்டினார். இதையடுத்து, பள்ளி மாணவர்கள் வேளச்சேரியில் உள்ள வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டனர்.
குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த டிடிவி தினகரன் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கு நாளை விசாரணை.
முறைகேடாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதாக கடந்த 1996-ம் ஆண்டு டிடிவி தினகரன் மீது அன்னிய செலாவணி மோசடி வழக்கை அமலாக்கத் துறை தொடர்ந்தது. இந்த வழக்கை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் நடைபெற்று வந்தது.
குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த டிடிவி தினகரன் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கை விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
முறைகேடாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதாக கடந்த 1996-ம் ஆண்டு டிடிவி தினகரன் மீது அன்னிய செலாவணி மோசடி வழக்கை அமலாக்கத் துறை தொடர்ந்தது. இந்த வழக்கை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் நடைபெற்று வந்தது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவர் அத்வானி மீதான குற்றச்சாட்டை மீண்டும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் இன்று சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது.
அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோர் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இருந்து ரேபர்லி கோர்ட்டால் விடுவிக்கப்பட்டனர். அலகாபாத் ஐகோர்ட்டும் இந்தத் தீர்ப்பை உறுதி செய்தது.
இந்நிலையில் பாஜக தலைவர்கள் விடுவிப்பை எதிர்த்து சிபிஐ சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டது. இந்த முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதாக இருந்தது.
சினிமா தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாகக் கூறி சிங்கம் 3 படத்துக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
சென்னை சேர்ந்த தேவராஜன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
சென்னை ஐகோர்ட்டில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க கோரி பொது நலன் மனு தாக்கல் செய்தார் டிராபிக் ராமசாமி.
ஜெயலலிதா மரணம் குறித்து பல சந்தேகங்கள் இருக்கிறது. அவர் மரணம் குறித்து சந்தகங்களுக்கு விடை கிடக்க வேண்டும். எனவே ஜெயலலிதா மரணம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க வேண்டும் எனவும், உடல் நலக்குறைவால் முன்னால் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட அப்பல்லோ மருத்துவமனையின் கேமரா காட்சிகளை ஆராய வேண்டும். மேலும் அப்பல்லோவின் தலைவர் பிரதாப் ரெட்டியிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொது நல மனுவில் கேட்டு கொண்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.