கோவாக்சின் தடுப்பூசி ஆய்வின் அடிப்படையில் 120 நாட்களுக்கு இதன் விளைவு தெரியும் என்று மருத்துவர் கிருஷ்ணா அல்லா கூறினார். ஆனால் அவரது சொந்த கருத்தில், தடுப்பூசியின் வீரியம் குறைந்தது ஒரு வருடமாவது இருக்கும் என்றார்.
பிரேசிலிய தடுப்பூசி கிளினிக்குகள் சங்கம் (ABCVAC) தனது இணையதளத்தில், கோவாக்சின் தடுப்பூசியை வாங்க இந்திய நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை உறுதிப்படுத்தியது.
இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்காக சீரம், பாரத் பயோடெக் தடுப்பூசிகளை டி.சி.ஜி.ஐ (DCGI) ஒப்புதல் அளித்தது. COVID-19 தடுப்பூசியை அவசர காலத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (DCGI) ஒப்புதல் அளித்தது.
கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை, ஆந்திர மாநிலம் உட்பட நான்கு மாநிலங்களில் நடத்தப்பட்ட நிலையில், வரும் 2ம் தேதி நாடு முழுவதும் ஒத்திகை நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) - பாரத்- பயோடெக் இணைந்து தயாரித்துள்ள கோவாக்சின் என்னும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு இந்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.
ரஷ்ய சுகாதார அமைச்சகம் செவ்வாயன்று COVID-19 தடுப்பு மருந்தான ஸ்பூட்னிக் -5 (Sputnik-5) இன் முதல் தொகுதி உற்பத்தியை ரஷ்யா பூர்த்தி செய்துள்ளது என்றும் இந்த தடுப்பு மருந்து விரைவில் ரஷ்ய பிராந்தியங்களில் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
PGI Rohtak துணைவேந்தர் டாக்டர் ஓ.பி. கல்ரா, தனது தடுப்பூசி பரிசோதனையின் இரண்டாவது சோதனை சுற்றைத் தொடங்க பாரத் பயோடெக்கிலிருந்து அனுமதி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்!!
"இளைஞர்கள் அல்லது வயதானவர்கள் என யாராக இருந்தாலும், அவர்கள் பொறுப்பற்றவர்களாகவும், முகமூடிகள் அணியாமல் இருப்பவர்களால் இந்தியாவில் அதிக அளவில் தொற்றுநோய் உண்டாகிறது"
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு 25 லட்சத்தை தாண்டிய நிலையில், நாட்டில் உள்ள விஞ்ஞானிகளும் ஆய்வாளர்களும், கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க இரவும் பகலும் அயராது உழைத்து வருகிறார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.