காற்று வெளியிடை திரைப்படம் அடுத்து மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் விஜய்சேதுபதி, துல்கர் சல்மான் நடிக்கின்றனர் என்பது அனைவருக்கும் தெரிந்த விசியம். இந்த புதிய படத்தில் தற்போது ஜோதிகாவும் ஒப்பந்தமாகி உள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கவிருக்கும் முதல் படமாகும். ஏற்கனவே பெரிய நடிகர்கள் நடிக்கும் இந்த படத்தில் ஜோதிகாவும் இணைந்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்து உள்ளது.
மேலும் மணிரத்னம் தனது அடுத்த படத்தில் பாலிவுட் நடிகர் சயீப் அலிகானின் மகள் சாரா அலிகா அறிமுகம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோதிகாவின் அடுத்த படம் ’மகளிர் மட்டும்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் வெளியானது.
இப்படத்தை நடிகர் சூரியா தயாரித்து வருகிறார். தற்போது உருவாகி வரும் ‘மகளிர் மட்டும்’ படத்தில் நாசர், லிவிங்ஸ்டன், பானுப்பிரியா, சரண்யா ஆகியோரும் நடிக்கிறார்கள். ஆவணப்படம் எடுக்கும் இயக்குநர் கதாபாத்திரத்தில் ஜோதிகா நடித்து வருகிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். மணிகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்நிலையில் மகளிர் மட்டும் படத்தின் காட்சிகள் தற்போது முடிவடைந்தாக 2டி நிறுவனம் தனது டிவிட்டார் பக்கத்தில் பட குழுக்களோடு புடைப்படத்துடன் தெரிவித்துள்ளது.
இயக்குனர் பாலா இயக்கும் அடுத்த படத்தில் நடிகை ஜோதிகா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தாரைதப்பட்டை படத்துக்குப் பிறகு இயக்குநர் பாலா இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் புதிய படமொன்றை EON Studios என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் பாலாவின் B Studios நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கவுள்ளது.
இன்னும் பெயரிப்படாத இப்படத்தில் மிகவும் பிரபலமான கதாநாயகன் நடிப்பார் என தகவல் கூறப்பட்டுள்ளது.
பாலாவின் அடுத்த படத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. ஜோதிகா தற்போது நடித்துவரும் மகளிர் மட்டும் படத்தினை தொடர்ந்து, பாலா படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்யின் புதுப் படத்தில் ஜோதிகா என்பது வெறும் செய்தியாகவே முடிந்துவிட்டது. இப்போது அந்த வேடத்தில் நடிக்க வேறு நடிகை வந்துவிட்டார்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் தொடங்கிவிட்டது. இந்தப் படத்தில் முதலில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டவர் ஜோதிகா.
இந்தப் படத்தில் முதலில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டவர் ஜோதிகா. அதைச் செய்ய முடியாது என்பதில் உறுதியாக இயக்குநர் இருந்ததால், முதல் கட்ட படப்பிடிப்புக்கு ஜோதிகா வரவில்லை.
இப்போது அந்த வேடத்துக்கு ஒப்பந்தமாகியிருப்பவர் நித்யா மேனன்.
36 வயதினிலே படத்துக்குப் பிறகு, மீண்டும் மகளிர் மட்டும் என்ற படத்தில் நடித்து வரும் ஜோதிகா #Vijay61 -ல் நடிப்பதாக கூறப்பட்டது. தற்போது அவர் விஜய் படத்தில் இருந்து விலகிவிட்டதாக தகவல்கள் பரவிவந்தது.
அக்டோபர் 18 1978-ம் தேதி ஜோதிகா பிறந்தார். இவர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். ஜோதிகா 1999-ல் வாலி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். குஷி, காக்கா காக்க, மன்மதன், சந்திரமுகி, மொழி படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகை நக்மா இவரது சகோதரி ஆவார். நடிகர் சூர்யாவை காதலித்து செப்டம்பர் 11 2006-ம் அன்று திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தியா, தேவ் என்று இரண்டு குழந்தைகள். இவக்குனர் பிரியதர்ஷனால் இந்திய படத்தில் அறிமுகமானார். இவர் மூன்று முறை தமிழக அரசு விருது பெற்றார்.
ஜோதிகாவின் அடுத்த படம் ’மகளிர் மட்டும்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. பிரம்மாவின் இயக்கத்தில் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்புபில் இப்படம் உருவாகிறது. மேலும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். படத்தில் சரண்யா பொன்வண்ணன், பானுப்பிரியா, ஊர்வசி, லிவிங்ஸ்டன் நடித்துவருகிறார் . இந்த படம் அடுத்த வருடம் மகளிர் தினத்தன்று வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.