Tamil Nadu Latest News Updates: கோயம்புத்தூர் மாவட்டம் சித்தாபுதூர் உள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தில் மகாராஷ்டிரா தேர்தலில் வெற்றியை பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் பாஜகவினர் கொண்டாடினார்கள். இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் ஏ பி முருகானந்தம், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், கோவை மாவட்ட தலைவர் ரமேஷ் மற்றும் பாஜக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
பின்னர் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், "மகாராஷ்டிராவில் ஏழைகள், பெண்கள், விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள் வழங்கியதால் மீண்டும் ஆட்சி அமைந்துள்ளது. பெண்களிடையே மிகப்பெரிய மாற்றம் தெரிகிறது. அதனால் மிக பிரம்மண்டமாக வெற்றி பெற்றுள்ளது.
ஈவிஎம் மெஷின் காரணமா...?
ஜார்க்கண்ட் மாநில முதல்வர் சிறைக்குச் சென்று ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் அந்த ஊர் மக்கள் அவரை வெற்றி பெற செய்துள்ளனர். மகாராஷ்டிராவில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நகர்ப்புறம் மட்டுமல்லாமல் கிராமப்புற பகுதிகளிலும் அதிக அளவில் வளர்ச்சி காரணமாக மகாராஷ்டிராவில் வெற்றி பெற்றுள்ளோம். காங்கிரஸ் வெற்றி பெறும் போதெல்லாம் ஈவிஎம் மிஷின் பற்றி பேசுவது இல்லை, ஆனால் தோல்வியடைந்த பிறகு ஈவிஎம் மெஷின் பற்றி பேசுகிறார்கள்.
மேலும் படிக்க | சிறப்பான கடன் திட்டம்... மானியத்தையும் அள்ளிவீசும் தமிழக அரசு - யாருக்கு கிடைக்கும்?
வயநாடு மக்கள் குடும்ப கட்சிக்கு இன்னொரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளனர். மாநில அரசு விவசாய நிலத்தை எடுத்து கொடுக்கும் போது கருத்துக் கேட்பு கூட்டம் நடத்த வேண்டும். ஆனால் மாநில அரசு அதனை நடத்தவில்லை. மத்திய அரசு நேரடியாக நிலத்தை கையகப்படுத்த முடியாது. அதேபோல் மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை திமுக அரசு வந்து கொண்டு வந்தது போல் செயல்படுத்துகின்றனர்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை
தேர்தல் நேரத்தில் திமுக கட்சி பொய் பிரச்சாரம் செய்து வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் இல்லை பல்வேறு மாநிலங்களில் மகளிர் உரிமை தொகை கொடுக்கப்பட்டு வருகிறது. மகளிர் உரிமைத் தொகையை (Kalaignar Magalir Urimmai Thogai) கொடுத்து அவர்களிடம் இருந்தே 20,000 ரூபாய் திமுக அரசு கொள்ளை அடிக்கிறது என சொன்னால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். திமுக அரசு என்றாலே சட்ட ஒழுங்கு சரி இருக்காது, ரவுடிகள் ஆட்சிதான் நடக்கும் என மக்கள் அனைவரும் நம்பி வருகின்றனர். திமுக எம்பிகள் பேசுவது எல்லாமே பொய் என்றும் மாநிலத்தின் முதல்வர் எம்பிகளுக்கு பொய் பேசக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்" என்றார்.
மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி
மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணியான மகா யுதி 235 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. கடந்த முறை முதல்வர் பதவி சிவசேனா கட்சிக்கு வழங்கப்பட்ட நிலையில், இந்த முறை அதிக தொகுதிகளை பாஜக கைப்பற்றியிருப்பதால் முதல்வர் அரியணையும் பாஜகவுக்கே என சொல்லப்படுகிறது. இருப்பினும் அது இன்னும் உறுதியாகவில்லை என்றாலும் பாஜக முகாம்களில் உள்ளவர்கள் உற்சாகத்தில் உள்ளனர். காங்கிரஸ் அங்கும் வகிக்கும் மகா விகாஸ் கூட்டணி 49 தொகுதிகளை மட்டும் கைப்பற்றி படுதோல்வியை சந்தித்துள்ளது.
காங்கிரஸ் தொகுதி ஒருபுறம் இருக்க, உத்தவ் தாக்ரேவின் சிவசேனா மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலா 10 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றினர். இரு கட்சிகளும் உடைந்த பிறகு நடைபெற்ற முதல் சட்டப்பேரவை தேர்தல் இது என்பதால் சிவசேனாவில் ஏக்நாத் ஷிண்டேவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் அஜித் பவாரும் தங்களது பலத்தை நிரூபித்துள்ளதால் பல மூத்த தலைவர்கள் இந்த பக்கம் தாவுவதற்கும் வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.
மேலும் படிக்க | 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை, ஆரஞ்சு அலெர்ட் வந்தாச்சு - உஷார் மக்களே
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ