எச்சரிக்கை... காலை உணவைத் தவிரப்பதால்... உடல் - மன ஆரோக்கியம் இரண்டும் பாதிக்கும்

Side Effects Of Skipping Breakfast: காலை உணவை தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் உடலின் ஆற்றல் அளவு மிகவும் குறைவாக இருக்கும் என்பதோடு, இதன் காரணமாக மன ஆரோக்கியமும் பாதிக்கப்படும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 24, 2024, 10:57 AM IST
  • காலை உணவை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
  • நாள் முழுவதும் வேலை செய்ய நமக்கு நிறைய ஆற்றல் தேவை.
  • காலை உணவை ஏன் தவிர்க்கக்கூடாது?
எச்சரிக்கை... காலை உணவைத் தவிரப்பதால்... உடல் - மன ஆரோக்கியம் இரண்டும் பாதிக்கும் title=

உணவாகக் கருதப்படுகிறது. இன்றைய பரபரப்பான வாழ்க்கையில், நேரம் இல்லை எனக் கூறி பலர் காலை உணவைத் தவிர்க்கிறார்கள். சிலர் உடல் எடையை குறைக்கவும் உணவை தவிர்க்கிறார்கள். ஆனால், எந்த காரணத்திற்காகவும் காலை உணவை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். பிரபல உணவியல் நிபுணர் ஆயுஷி யாதவ், நாம் காலை உணவைத் தவிர்க்கக் கூடாது என்பதற்கான வலுவான காரணங்கள் என்பதை விளக்கிக் கூறினார்.

காலை உணவை ஏன் தவிர்க்கக்கூடாது?

நாள் முழுவதும் தேவையான ஆற்றல்

நாள் முழுவதும் வேலை செய்ய நமக்கு நிறைய ஆற்றல் தேவை. காலை உணவு இல்லை என்றால், ஆற்றல் அளவு மிகவும் குறைவாக இருக்கும். அன்றாட வேலையின் போது சோர்வை சந்திக்க நேரிடும். ஆரோக்கியமான காலை உணவை உட்கொள்வது நமது அன்றாட செயல்பாட்டை சிறப்பாக செய்ய உதவுகிறது. எனவே, இதனை தவிர்ப்பது புத்திசாலித்தனம் இல்லை.

இரத்த சர்க்கரை அளவு குறையும்

காலை உணவைத் தவிர்த்தால் இரத்த சர்க்கரை அளவு திடீரென குறையும் வாய்ப்பு அதிகம். இதன் விளைவாக, மயக்கம், பலவீனம் மற்றும் கவனம் செலுத்துவதில் சிரமம் ஆகிய பிரச்சனைகள் ஏற்படலாம். குறிப்பாக, காலை உணவைத் தவிர்ப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஆபத்தானது. 

மனநிலை மாற்றங்கள்

காலை உணவு உண்ணாமல் இருப்பது உடல் ஆரோக்கியத்தில் மட்டுமின்றி மன ஆரோக்கியத்திலும் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்கவில்லை என்றால், ​​மூளைக்கும் தேவையான அளவு ஆற்றல் சரியாக கிடைக்காமல் போய் விடும். இதன் காரணமாக, மனநிலையில் மாற்றங்கள், எரிச்சல், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். ஆகையால், நாள் முழுவதும் மூளை சுறுசுறுப்பாக இருக்க, காலை உணவை உட்கொள்ள வேண்டியது மிக அவசியம்.

மேலும் படிக்க | தொப்பை கொழுப்புக்கு உடனடி தீர்வளிக்கும் சமையலறை மசாலாக்கள்: ட்ரை பண்ணி பாருங்க

உடல் பருமன்

சிலர் குறைவாக சாப்பிட்டால், உடல் எடை குறையும் என்று நினைக்கிறார்கள். இது மிகவும் தவறான எண்ணம். காலை உணவை தவிர்ப்பதால், மதிய உணவு நேரத்தில் அதிகப்படியான பசியை உணர்கிறார்கள். இதனால், தன்னை அறியாமல், அதிக கலோரிகளை உட்கொள்ளும் நிலை ஏற்படுகிறது. மாறாக, காலையில் ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொண்டால், ஆற்றல் அளவு கலோரிகள் சரியாக விநியோகிக்கப்படும் மற்றும் நாள் முழுவதும் ஒரே மாதிரியாக இருக்கும் மற்றும் எடையைக் குறைக்க உதவும்.

வளர்சிதை மாற்றம்

காலை உணவைத் தவிர்ப்பது உங்கள் வளர்சிதை மாற்றத்தை மந்தமாக்கும். நீங்கள் காலையில் எதையும் சாப்பிடவில்லை என்றால், ஆற்றலைப் பாதுகாக்க வளர்சிதை மாற்றத்தின் விகிதத்தை உடல் தானாக குறைக்கிறது. வளர்சிதை மாற்றம் மந்தமாவது உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். ஏனெனில் நாள் முழுவதும் எரிக்கப்படும் கலோரிகளின் எண்ணிக்கை இதனால், குறைகிறது. ஆகையால், காலை உணவை உட்கொள்வது உங்கள் உடலுக்கு ஆற்றலை வழங்குவதோடு மட்டுமல்லாமல், வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்க உதவும்.

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

மேலும் படிக்க | செரிமானம் முதல் நினைவாற்றல் வரை: இலவங்கப்பட்டை நீர் அளிக்கும் ஆரோக்கிய நன்மைகளின் லிஸ்ட் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News