Tamannaah Bhatia Wedding : கிட்டத்தட்ட, 15 வருடங்களுக்கும் மேலாக தமிழ் ரசிகர்களை கவர்ந்த நடிகையாக வலம் வருகிறார், தமன்னா. இவருக்கு, தற்போது திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தமன்னா:
நடிகை தமன்னா, 2006ஆம் ஆண்டு வெளியான ‘கேடி’ படம் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். இந்த படத்தில் அவர் வில்லியாக நடித்திருந்தார். அதன் பிறகு தொடர்ந்து வியாபாரி, கல்லூரி போன்ற படங்களில் நடித்தார். இதற்கு இடையே தெலுங்கு படங்கள் சிலவற்றிலும் நடித்து வந்தார். இவருக்கு பெரும் புகழை தேடிக்கொடுத்தது படிக்காதவன், அயன், கண்டேன் காதலை போன்ற படங்கள்தான்.
பையா, சிறுத்தை, வீரம் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து வந்த இவருக்கு, பாகுபலி படம் பெரிய ஏற்றத்தை கொடுத்தது. பாலிவுட்டில் பெரிதாக முகம் காட்டாமல் இருந்த இவருக்கு, அங்கும் பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. இப்போது, தமிழில் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், இந்தி திரையுலகில் ஜொலித்து வருகிறார்.
நடிகருடன் காதல்..
நடிகை தமன்னா, அனைத்து நடிகைகளையும் போலவே காதல் கிசுகிசுக்களில் சிக்கியவர். இவர், கோலிவுட்டை சேர்ந்த ஒரு நடிகருடன் 3 படங்களில் ஜாேடி சேர்ந்து நடித்திருக்கிறார். அந்த நடிகரும் இவரும் காதலித்து வந்ததாகவும், அந்த நடிகரின் குடும்பம் தமன்னாவிற்கு கன்டீஷன் போட்டதால், அந்த காதல் பிரேக்-அப்பில் முடிந்ததாகவும் கூறப்பட்டது.
தமன்னா, தற்போது பிசியாக பாலிவுட் படங்களில் நடித்து வரும் நிலையில் அவர் இந்தி நடிகர் ஒருவரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. அந்த நடிகரின் பெயர், விஜய் வர்மா. இவருக்கு 38 வயதாகிறது.
திருமணமா?
தமன்னாவும் விஜய் வர்மாவும் கடந்த ஆண்டு வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் 2 திரைப்படத்தில் ஒன்றாக நடித்தனர். அது ஒரு ஆந்தாலஜி படமாக இருந்தாலும், தமன்னாவின் கதாப்பாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பிருந்தே இருவரும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இருவரும், இதுவரை தங்கள் உறவு குறித்து ஊடகத்தினரிடம் வாய் திறந்ததில்லை. ஆனால், வெளி இடங்களில் இவர்கள் ஒன்றாக இருப்பதும், சில நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாக வருகை தருவதும் கேமராவின் கண்களில் இருந்து தவறவில்லை.
மேலும் படிக்க | ‘எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும்..’ பிரபல நடிகருடனான காதலை உறுதி செய்த தமன்னா?
தமன்னா-விஜய் வர்மா, தங்களின் உறவை அடுத்த படிக்கு கொண்டு செல்ல திட்டமிட்டு வருகின்றனராம். இருவரும், தங்களின் திருமண தேதியை குறிக்க ஆயத்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இருவரும் ஒன்றாக தங்களது கனவு இல்லத்தை தேடி வருகின்றனராம். எல்லாம் செட் ஆனவுடன் 2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனராம். தமன்னாவின் திருமணம் குறித்த வதந்திகள், வருடத்திற்கு ஒரு முறை வைரலாவது வழக்கம். இதுவும் அது போன்ற வதந்தியா, உண்மை தகவலா என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும்.
கடைசியாக நடித்த தமிழ் படம்..
நடிகை தமன்னா, கடைசியாக இந்த ஆண்டு வெளியான அரண்மனை 4 படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம், வெற்றி பெற்றதை தொடர்ந்து தமன்னாவின் நடிப்பிற்கும் வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து தற்போது சிக்கந்தர் கா முகாதர் என்ற இந்தி படத்திலும் ஓடெலா 2 என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்பு நடைப்பெற்று வருகிறது.
மேலும் படிக்க | தங்க சிலை போல் தகதகவென ஜொலிக்கும் நடிகை தமன்னா! வைரல் போட்டோஸ்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ