பிரசவத்திற்கு பிறகு தொப்பை கொழுப்பு அதிகரித்துவிட்டதா? குறைக்க இயற்கையான வழிகள் இதோ

Weight Loss Tips: பிரசவத்திற்குப் பிறகு பெண்களில் மாற்றங்கள் மட்டுமலாமல், சில பல அசவுகரியங்களும் ஏற்படுகின்றன. அவற்றில், பெரும்பாலான பெண்கள் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான, முக்கியமான பிரச்சனை தொப்பை கொழுப்பு அதிகரிப்பதாகும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 22, 2024, 11:49 AM IST
  • சரியான உணவை உட்கொள்ள வேண்டும்.
  • லேசான உடற்பயிற்சி செய்யலாம்.
  • தவறாமல் தாய்ப்பால் கொடுப்பது அவசியம்.
பிரசவத்திற்கு பிறகு தொப்பை கொழுப்பு அதிகரித்துவிட்டதா? குறைக்க இயற்கையான வழிகள் இதோ title=

Weight Loss Tips: ஒரு பெண்ணின் வாழ்வில் பிரசவம் என்பது மறுஜென்மம் போன்றது. கர்ப்ப காலம் ஒரு முக்கியமான காலமாக பார்க்கப்படுகின்றது. இந்த காலத்தில் பெண்களின் உடலில் பல வித மாற்றங்கள் ஏற்படுகின்றன. உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அவர்கள் பல வித மாற்றங்களை அனுபவிக்கிறார்கள். பிரசவத்திற்குப் பிறகு பெண்ணின் உடல் முன்னர் இருந்த நிலைக்கு முழுமையாக திரும்புவது இல்லை. 

பிரசவத்திற்குப் பிறகு பெண்களில் மாற்றங்கள் மட்டுமலாமல், சில பல அசவுகரியங்களும் ஏற்படுகின்றன. அவற்றில், பெரும்பாலான பெண்கள் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான, முக்கியமான பிரச்சனை தொப்பை கொழுப்பு அதிகரிப்பதாகும்.

பிரசவத்திற்குப் பிறகு தொப்பை கொழுப்பு அதிகரிப்பது ஏன்?

கர்ப்ப காலத்தில், உடலில் கூடுதல் கொழுப்பு அதிகரிக்கத் தொடங்குகிறது. இது பிரசவத்திற்குப் பிறகும் சில பகுதிகளில் அப்படியே இருந்துவிடுகிறது. குறிப்பாக வயிற்றைச் சுற்றி இது அதிகமாக குவிகிறது. இருப்பினும், இதற்கான பிரத்யேகமான உடல் செயல்பாடுகள் மற்றும் சரியான உணவுமுறை மூலம், அதிகரிக்கும் இந்த கொழுப்பை எளிதாகக் குறைக்கலாம். பிரசவத்திற்குப் பிறகு தொப்பையில் சேரும் கொழுப்பைக் குறைக்கும் சில இயற்கையான வழிகளைப் பற்றி இங்கே விரிவாக தெரிந்து கொள்ளலாம்-

சரியான உணவை உட்கொள்ள வேண்டும்

பிரசவத்திற்குப் பிறகு வயிற்று கொழுப்பைக் குறைக்க முதல் படி சரியான உணவை உட்கொள்வதாகும். அதிக புரதம் மற்றும் குறைந்த கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகளில் கவனம் செலுத்துவது நல்லது. முழு தானியங்கள், பருப்பு வகைகள், பச்சைக் காய்கறிகள், பழங்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகள் வயிற்றை லேசாக வைத்து உடல் எடையைக் குறைக்க உதவுகின்றன. சர்க்கரை மற்றும் வறுத்த, பொரித்த உணவுகளில் இருந்து விலகி இருப்பது நல்லது. ஏனெனில் அவற்றின் மூலம் கொழுப்பு அதிகரிக்கின்றது.

அதிக தண்ணீர் குடிக்கவும்

தண்ணீர் அருந்துவது உடல் எடையை குறைக்க உதவுகிறது. பிரசவத்திற்குப் பிறகு உடலில் நீரிழப்பு ஏற்படக்கூடும். ஆகையால், போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். நீர் உங்கள் வளர்சிதை மாற்றத்தை ஆரோக்கியமாக வைத்து தொப்பையை குறைக்க உதவுகிறது. இது தவிர, தண்ணீர் உடலில் சேரும் நச்சுக்களை நீக்கி, உடல் எடையை குறைக்க உதவுகிறது.

மேலும் படிக்க | குளிர் காலத்தில் காலையில் இந்த பழத்தை சாப்பிட்டால் வயிறு பிரச்சனைகளே வராது..!

லேசான உடற்பயிற்சி செய்யலாம்

பிரசவத்திற்கு பிறகு உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள லேசான உடற்பயிற்சிகளை செய்வது மிகவும் அவசியம். தொடக்கத்தில் இலகுவான நடைப்பயிற்சி, யோகாசனம் மற்றும் பெல்விக் ஃப்ளோர் பயிற்சிகள் போன்ற எளிதான பயிற்சிகளுடன் தொடங்கலாம். இந்த பயிற்சிகள் உங்கள் வயிற்று தசைகளை தொனிக்கவும் கொழுப்பை குறைக்கவும் உதவுகின்றன.

தவறாமல் தாய்ப்பால் கொடுப்பது அவசியம்

தாய்ப்பால் கொடுப்பது குழந்தைக்கு மட்டுமல்லாமல், தாயின் ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது. உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது, ​​​​உடல் கூடுதல் கலோரிகளை எரிக்கிறது. இது எடை இழப்புக்கு உதவுகிறது. தொப்பையை குறைக்க இது ஒரு இயற்கையான வழியாக கருதப்படுகின்றது.

போதுமான தூக்கம்

உறக்கம் உடல் எடையில் நேரடி விளைவைக் கொண்டிருக்கிறது. நீங்கள் போதுமான அளவு தூங்கவில்லை என்றால், மன அழுத்த ஹார்மோன் கார்டிசோலின் அளவு உடலில் அதிகரிக்கிறது. இது தொப்பை கொழுப்பு (Belly Fat) அதிகரிக்க வழிவகுக்கும். ஆகையால், பிரசவத்திற்குப் பிறகு நல்ல மற்றும் முழுமையான தூக்கத்தைப் பெறுவது முக்கியமாகும். இது உங்கள் உடலை ரிலாக்ஸ் செய்வது மட்டுமின்றி, தொப்பையை குறைக்கவும் உதவுகிறது.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | முதுகு வலி, இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல்.... ஆண்களில் காணப்படும் 6 முக்கிய புற்றுநோய் அறிகுறிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News