மும்பை: நிலை ஒன்றில் இடம்பெற்றுள்ள மாவட்டங்கள் முழுமையாக திறக்கப்படும் என்று அமைச்சர் விஜய் வதேட்டிவார் தெளிவுபடுத்தியுள்ளார். இங்குள்ள ஒவ்வொரு அலுவலகத்திலும் 100% வருகை இருக்கும்.
டக் தே சூறாவளி கரையைக் கடக்கத் தொடங்கியது. அதிகபட்ச எச்சரிக்கை நிலையில், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்கள் வைக்கப்பட்டுள்ளன. புயலின் காரணமாக 14 பேர் இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரேபிய கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவான டவ்-தே புயல், பின்னர் வலுப் பெற்று கர்நாடகா, கோவா, கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் வழியாக குஜராத் கடற்கரையில் இன்னும் வலுப்பெற்று நிலை கொண்டது.
மராத்தா சமூகத்திற்கு 50 சதவீதத்திற்கும் மேலான இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று தெளிவுபடுத்திய உச்ச நீதிமன்றம், பொதுக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மராத்தா சமூகத்திற்கு இடஒதுக்கீடு அளிக்கும் செப்சி சட்டம் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று நீதிமன்றம் கருதுகிறது. அதனால் மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு வழங்கிய மகாராஷ்டிரா அரசின் சட்டம் செல்லாது என அதிரடியாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
நேற்று கொரோனா பாதிப்பு 96,424 பேருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து இந்தியாவில் கோவிட் -19 நோய்தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 5.2 மில்லியனைத் தாண்டியுள்ளது.
செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 6, 2021) காலை வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 96,982 பேர் கோவிட் -19 தொற்றுநோயால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இப்போது 1.25 கோடியாக உயர்ந்துள்ளது. அவற்றில் சுமார் 1.16 கோடி பேர் குணமடைந்துள்ளனர்.
மார்ச் 23 வரையிலான கடைசி ஏழு நாட்களில், மகாராஷ்டிராவில் தினசரி புதிய தொற்றுக்களின் வளர்ச்சி விகிதம் 3.6 சதவீதமாகவும், பஞ்சாபில் 3.2 சதவீதமாகவும் இருந்தது.
மகாராஷ்டிராவில் மிக அதிகமாக கொரோனா தொற்று பரவி வருகிறது. இதனால் மகாராஷ்டிராவின் நந்தூர்பார் மாவட்டத்தில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டு உள்ளது. அதாவது ஏப்ரல் 15 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.
ஏற்கனவே போடப்பட்ட கொரோனா பொது முடக்கத்தால் வேலையிழந்த மற்றும் பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட நிதி இழப்புகளில் இருந்து இன்னும் அவர்கள் மீட்கப்படவில்லை. இன்றும் பலர் வேலையில்லாமல் உள்ளனர். அரசாங்கம் மீண்டும் பொதுமுடக்கம் அறிவித்தால் வேலையின்மை மீண்டும் அதிக அளவில் அதிகரிக்கும்" என்கிறார் சுனிட்டி.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.