ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தின் 58 கிலோ எடை பிரீ ஸ்டைல் பிரிவில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்றார். இதன்மூலம் மல்யுத்தப் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற புதிய சாதனை படைத்தார். நாடு திரும்பிய சாக்ஷி, இன்று அதிகாலை டில்லி விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர்கள், பொதுமக்கள் அவரை வரவேற்றனர். சாக்ஷி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்த அனைவருக்கும் நன்றி எனத் தெரிவித்தார்.
குத்துச்சண்டை ஆடவர் 75 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் விகாஸ் கிருஷ்ணன், அமெரிக்காவின் சார்லஸ் கான்வெல்லை எதிர்கொண்டார். 24 வயதான விகாஸ் கிருஷ்ணன் 3 ரவுண்டுகளின் முடிவில் 3-0 (29-28, 29-28, 29-28) என்ற கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
குத்துச்சண்டை ஆடவர் 64 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற இந்தியாவின் மனோஜ் குமார், லித்வேனியாவின் எவல்டாஸ் பெட்ராஸ்காஸை எதிர்கொண்டார். விறுவிறுப்பான இப்போட்டியில், மனோஜ் குமார், 2-1 என்ற புள்ளிக் கணக்கில் பெட்ராஸ்காஸை தோற்கடித்து, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். 2012-ம் ஆண்டு ஒலிம்பிக்கில், லித்வேனியாவின் பெட்ராஸ்காஸ் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.