வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானில் ஆளில்லா விமானம் மூலம் இரண்டு இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. அண்மையில் காபூல் விமான நிலையத்தில் நடந்த த்ஃஅற்கொலை படை தாக்குதலில் 169 ஆப்கானிஸ்தான் மற்றும் 13 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பிடன் சூளுரைத்தார்.
தற்கொலை படை தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ISIS-K
ஆப்கானிஸ்தானில் உள்ள ISIS பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பான இஸ்லாமிக் ஸ்டேட்-கோராசன் (ISIS-K) காபூலில் உள்ள ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தின் மீது வியாழக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. இந்நிலையில் அமெரிக்காவின் பதிலடி குறித்து, பிராந்திய நடவடிக்கைகளுக்கான கூட்டுப் பணியாளரின் துணை இயக்குநர் மேஜர் ஜெனரல் ஹாங்க் டெய்லர் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஐஎஸ்ஐஎஸ்ஸின் இரண்டு உயர்மட்ட உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர், ஒருவர் காயமடைந்தார். இதில் பொதுமக்கள் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. தேவையான தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ந்து நடத்துவோம் என்று கூறினார்.
இறந்தவர்கள் அடையாளம் காணப்படவில்லை
இருப்பினும், ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட ISIS-K பயங்கரவாதிகள் குறித்த மேலதிக விவரங்களை வெளியிட அவர் மறுத்துவிட்டார். இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாதக் குழு மேலும் தாக்குதல் நடத்தும் சாத்தியம் உள்ளதா என்பது குறித்து கேட்கையில், "அச்சுறுத்தல்கள் இருப்பதை மறுக்க முடியாது, தற்போது, நாங்கள் அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்" என்றார். தேவைக்கேற்ப மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது மற்றும் ஆகஸ்ட் 31ம் தெதி க்குள் எங்கள் பணியை முடிப்பதே எங்கள் நோக்கம் என்றும் அவர் கூறினார்.
ALSO READ | Viral Pics: தாலிபான் ஆட்சிக்கு முன் ஆப்கானில் சுதந்திர பறவைகளாக இருந்த பெண்கள்
'குறிவைத்தவர்கள் கொல்லப்பட்டனர்'
முன்னதாக, அமெரிக்க மத்திய கட்டளையின் செய்தித் தொடர்பாளர் கேப்டன் பில் அர்பன், " ISIS-K சதிகாரருக்கு எதிராக அமெரிக்க இராணுவம் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையைத் தொடங்கியது. இந்த ஆளில்லா விமானத் தாக்குதல் ஆப்கானிஸ்தானின் நங்கார் மாகாணத்தில் நடந்தது. இதில் குறிவைத்தவர்களை கொன்றுவிட்டோம். பொதுமக்கள் உயிரிழப்பு குறித்து தகவல் இல்லை. ஆப்கானை விட்டு வெளியேறுவதற்கு முன், காபூல் விமான நிலையத்தை தாக்கிய பயங்கரவாதிகளை உயிருடன் விட்டு செல்ல அதிபர் ஜோ பிடன் விரும்பவில்லை என்று வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் ஜென் சாகி தனது வழக்கமான பத்திரிக்கையாளர் மாநாட்டில் கூறினார்.
'அடுத்த சில நாட்கள் மிகவும் ஆபத்தான காலங்கள்'
தற்கொலை குண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட 13 அமெரிக்க வீரர்களின் மரணத்திற்கு பழிவாங்குவதாக அமெரிக்க அதிபர் சூளுரைத்தார். வியாழக்கிழமை வெள்ளை மாளிகையில், 'இந்த தாக்குதலை நடத்தியவர்கள் மற்றும் அமெரிக்காவுக்கு தீங்கு செய்ய விரும்புவோர், நாங்கள் அவர்களை விடமாட்டோம். கண்டுபிடித்து வேட்டையாடப்படுவார்கள். நான் எனது நாட்டின் நலன்களையும் எனது மக்களையும் பாதுகாப்பேன்’ என்றார் ஜோ பைடன். இதற்கிடையில், அதிபர் பைடனின் தேசிய பாதுகாப்பு குழு அவரிடம் காபூலில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நிகழ வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது. வெள்ளை மாளிகையின் அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை வெளியேற்றும் பணியின் அடுத்த சில நாட்கள் மிக ஆபத்தான நேரமாக இருக்கும் என்றார்.
ALSO READ | Kabul Airport Blast: காபூல் விமான நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல்; ISIS பொறுப்பேற்பு
காபூல் விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
அமெரிக்க அதிபர், தனது தேசிய பாதுகாப்பு குழுவை சந்தித்தபோது, ஆபத்து குறித்த சாதித்தியக்கூறுகள் பகிரப்பட்டது. பிராந்தியத்தின் உயர் தளபதிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அமெரிக்க துணை அதிபர் தலைவர் கமலா ஹாரிஸும் வீடியோ டெலிகான்ஃபரன்ஸில் கலந்து கொண்டார். "காபூலில் மீண்டும் தீவிரவாத தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக அதிபர் மற்றும் துணை அதிபரிடம், தேசிய பாதுகாப்பு குழு கூறியதை அடுத்து காபூல் விமான நிலையத்தில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்" என்று வெள்ளை மாளிகை அதிகாரி கூறினார்.
ALSO READ | காபூல் விமான நிலையத்தில் ஒரு பாட்டில் தண்ணீர் ரூ. 3000, ஒரு தட்டு சோறு ரூ. 7500!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR