டோக்யோ: ஜப்பானில் சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்ப்பட்டதை அடுத்தது, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
ஜப்பானின் வடக்கு பகுதியில் இரண்டு முறை தொடர்ந்து பூகம்பம் ஏற்பட்டு உள்ளது. நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவுகோல் 6.8 ஆக பதிவாகி உள்ளது. இது கடுமையான அளவாகும். அசம்பாவிதம் குறித்து தகவல் எதுவும் இல்லை.
ஜப்பானில் சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்ப்பட்டதை அடுத்தது, யமகட்டா, நிகாட்டா மற்றும் இஷிகவா பகுதியில் சுனாமி தாக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனவே வடக்கு கடற்கரைக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
Earthquake of Magnitude:6.5, Occurred on:18-06-2019, 18:52:20 IST, Lat: 38.6 N & Long: 139.4 E, Depth:10 Km, Region:Near West Coast of Honshu, Japan pic.twitter.com/mHwVucWSHM
— India Met. Dept. (@Indiametdept) June 18, 2019