இனி ட்விட்டரை பயன்படுத்த கட்டணம் வசூல்; எலோன் மஸ்கின் அதிரடி திட்டம்

எலான் மஸ்க் ட்விட்டர் பயனர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், இனிவரும் காலங்களில் டுவிட்டரை இலவசமாகப் பயன்படுத்த முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 4, 2022, 10:08 AM IST
  • எலான் மஸ்க் ட்விட்டர் பயனர்களுக்கு கொடுத்துள்ள அதிர்ச்சி
  • ட்விட்டரை இலவசமாகப் பயன்படுத்த முடியாது.
  • பயனர்கள் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
இனி ட்விட்டரை பயன்படுத்த கட்டணம் வசூல்; எலோன் மஸ்கின் அதிரடி திட்டம் title=

டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் ட்விட்டரை வாங்கிய நிலையில், அவ்வவ்போது பல அவரது அறிக்கைகள் மற்றும் ட்வீட்களால் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். தற்போது, இனிவரும் காலங்களில் டுவிட்டரை இலவசமாகப் பயன்படுத்த முடியாது என எலோன் மஸ்க் ட்வீட் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார். சில பயனர்கள் பணம் செலுத்த வேண்டியிருக்கும் என குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், சாதாரண பயனர்களுக்கு சமூக ஊடக தளம் முற்றிலும் இலவசம் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

எலோன் மஸ்க் பதிவு செய்துள்ள ட்வீட் 

டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் செவ்வாயன்று ட்விட்டர் நிறுவனத்தின் வணிக மற்றும் அரசாங்க பயனர்களிடம் சிறிதளவு கட்டணத்தை வசூலிக்கலாம் என்று கூறினார். மஸ்க் ஒரு ட்வீட்டில், "சாதாரண பயனர்களுக்கு ட்விட்டர் எப்போதும் இலவசமாக இருக்கும், ஆனால் வணிக/அரசு பயனர்களிடம் சிறிது கட்டணம் வசூலிக்கப்படும்." என பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க | புதிய ட்விட்டர் CEO நியமிக்க எலோன் மஸ்க் திட்டம்; அச்சத்தில் ட்விட்டர் ஊழியர்கள் 

மாற்றத்திற்கான மனநிலையில் எலோன் மஸ்க்

ட்விட்டரை 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்கிய எலோன் மஸ்க் இப்போது பல பெரிய மாற்றங்களைச் செய்யும் மனநிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிறுவனத்தில் இருந்து தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் மற்றும் பாலிசி ஹெட் விஜயா காடே ஆகியோர் நீக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ட்விட்டர் நிர்வாகத்தின் மீது மஸ்க் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில், எலோன் மஸ்க் ட்விட்டருக்கு புதிய தலைமை நிர்வாக அதிகாரியை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக, செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ட்விட்டரின் எடிட் பட்டன் வசதி

ட்விட்டர் அதன் பயனர்களுக்கு, பதிவிடும் ட்வீட்களில் உள்ள தவறுகளை சரிசெய்ய உதவும் எடிட் பட்டனை வழங்கவும் திட்டமிட்டுள்ளது. சமூக ஊடக தளத்தின் புதிய முதலாளி எலோன் மஸ்க் இது தொடர்பாக வலியுறுத்தியதை அடுத்து, விரைவில் எடிட் பொத்தானை வழங்கவும் தயாராகி வருகிறது.

மேலும் படிக்க | எலான் மஸ்கின் ஆட்குறைப்பு திட்டம்; அச்சத்தில் ட்விட்டர் பணியாளர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News